என் காதலியே

உன் கண்களோடு சந்திக்கும்
ஒவ்வொரு கனமும்,
கர்வம் கொள்ளுகிறேன்...
நான் இத்தனை அழகாய்யென்று..

உன் இதழ் சிந்தும்
புன்னகையை தேடி தேடி
தினமும் தொலைக்கிறேன்
என்னை நிஜமாகவும் நிழலாகவும் ...

மௌனமாய் நீ அழைக்கின்ற
இதழ் மொழி புரியாமல்,
உன் புன்னகையில்
என்னை கொள்ளை கொல்கிறாய்...

என்னை புரியாமல் நிற்கிறேன்,
நீ என் அருகில் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்,
நம் காதலில் ...

கவிதையும் வெட்கம் கொள்ளும்,
உன் கன்ன சிவப்பில் , தினமும்
நான் தொலைந்துபோக துடிக்கிறேன் ..
என் காதலியே...

என்னுள் வேட்க்கை விளைவித்தவளே,
உன்னோடு இருக்கும் காலம் எப்பொழுது ..
காத்துக்கிடக்கிறேன் ஒவ்வொரு நொடியும்,
உன் போர்வையாய் மாற..

எழுதியவர் : (8-Sep-17, 4:25 pm)
சேர்த்தது : சுபா பிரபு
Tanglish : en kathaliye
பார்வை : 92

மேலே