நான் நானாகவே

நீங்கள் என்னை புதைத்து கொண்டேயிருங்கள்
நான் முளைத்து கொண்டே இருப்பேன்.
நீங்கள் என்னை தூற்றி கொண்டேயிருங்கள்.
நான் தூறலாய் புகழ்பரவி இருப்பேன்.
நீங்கள் என்னை நிந்தித்து கொண்டேயிருங்கள்.
நான் யாருக்கேனும் நிழலாய் இருப்பேன்.
நீங்கள் என்னை குறைகூறி கொண்டேயிருங்கள்.
நான் குறைவில்லாமல் வளர்ந்து கொண்டே இருப்பேன்.
நீங்கள் என்னை வஞ்சித்து கொண்டே இருங்கள்.
நான் வளர்ந்து கொண்டே இருப்பேன்.
நீங்கள் எப்படி வேண்டுமாயினும் இருங்கள்.
நான் நானாகவே மட்டும் இருப்பேன்.