முழு நிலவு
முழு நிலவு 🌕....
உதயவன் ஒளியை உரிஞ்சி
உருண்டு திரண்ட மூட்டைப்பூச்சி....
நாளின் இறப்பில்
நெற்றியில் ஒட்டிய
ஒற்றைக் காசு....
பரதேசி குபேரனாகி
விட்டெறிந்த திருவோடு
வானப் பந்தலில் தொத்திக் கொண்டதோ...?
பால்வெளியில் பசுமைப் புரட்சிக்காய்
விண்ணில் வீசப்பட்ட விதைப்பந்து...
பாட்டி உலர்த்திய வடகத்தை
காத்திருந்து களவாடிய காகம்
நீலநரியிடம் பறிகொடுத்ததோ...?
வான் மகள் வாங்கிய வைரங்களுக்கு
இலவசமாய் கிடைத்த தங்க நாணயம்...
கவிதாயினி அமுதா பொற்கொடி