வெடி குண்டு

தொலைப்பேசி அலறியது.
ஹலோ போலிஸ் ஸ்டேஷனா..
சார் எங்க தெருவில ஒரு வீட்டில் சிலிண்டர் வெடிச்சுருச்சு சீக்கிரம் வாங்க சார்.
தம்பி நீங்க எங்க இருந்து பேசுறீங்க.
காமராஜர் தெருவில் கரிக்கடை காதர் என்று சொல்லி முடிக்கும் முன் எதிர்முனையில் ரிசீவரை கையால் மறைத்தவாறு,
ஏட்டையா இன்னைக்கு செமையா ஒரு நியூஸ் சிக்கிருக்கு.எல்லா நியூஸ் சேனலையும் அந்த தெருவுக்கு வர சொல்லிருங்க.நாளைக்கு தலைப்பு செய்தி இதுவாத்தான் இருக்கனும்.
"வீட்டில் குண்டு தயாரித்த தீவிரவாதி,
இந்திய முஜாகிதீனுடன் தொடர்பா" என்று சிரித்தவாறு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டவரிடம் பேச ஆரம்பித்தார்.

சார் காமராஜர் தெருவில் கரிக்கடை காதர் பாய் வீட்டுக்கு பக்கதில் இருக்கும் கிஷோர்ங்கிறவர் வீட்டுல சிலிண்டர் வெடிச்சுருச்சு,
நாங்க ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டோம்.நீங்க உடனே வாங்க என்று தொலைப்பேசியை அணைத்தார் கார்த்திக்..
இன்ஸ்பெக்டர் முகத்தில் படர்ந்த குரூர புன்னகை அசடாய் வழிந்தது.

சில பொதுப்புத்தி பின் புத்திதான்...

எழுதியவர் : சையது சேக் (9-Sep-17, 5:25 pm)
சேர்த்தது : சையது சேக்
Tanglish : vedi kundu
பார்வை : 153

மேலே