என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 27
சனிக்கிழமையும் ஞாயிற்று கிழமையும் மெசேஜ்களில் கழிந்தன ப்ரவீனுக்கும் விஜிக்கும். அதேதான் முபாரக்குக்கும் காயத்ரிக்கும். இதில் முபாரக் - நர்கீஸ் உரையாடல்களும் அதிகம். அதில் ரியாஸ் மற்றும் விஜய் இருவருக்கும் இடை இடையே மெசேஜ்களை மாறி மாறி விஜியும் காயத்ரியும் அனுப்பினர். ஒரு தீவிர பிணைப்பு பாசம் இவர்களுக்கு மத்தியில்.
திங்கட்கிழமை.......
வழக்கம் போல் செந்திலின் பயம் காயத்ரிக்கு, அன்று ஹோட்டலில் பார்த்திருப்பானோ, பார்த்திருந்தால் இன்று என்ன கேட்பானோ....என்ற பயத்தில் ஒரு பதற்றத்திலேயே வந்தாள் காயத்ரி.இதை பார்த்த விஜி,"காயத்ரி, உன் மூஞ்சி ஏன் இப்டி பயத்துல வெளிறி போய் இருக்கு, நீயே உன் ரியாக்ஷன் ல மாட்டிக்குவ போல இருக்கு" என்றாள் விஜி.
காலேஜ் செல்ல பேருந்துக்காக வளவனூர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர் இருவரும். அவர்களின் அருகில் ஒரு கார் வந்து நின்றது, அதில் ரோஸெலின் மற்றும் டேவிட் இருந்தனர்.
"வா விஜி, உள்ள உக்காரு, காயத்ரி நீயும் தான்" காருக்குள் அழைத்தான் டேவிட். தயக்கம் ஏதும் இன்றி உள்ளே அமர்ந்தனர் இருவரும்.
கார் காலேஜ் வரும்வரை ஏதும் யாரும் பேசவில்லை. டேவிடுக்கும் தெரியும், அன்று அவன் பிரவீனிடம் நடந்துகொண்ட விதத்துக்கும் அன்று பிரவீன் கொடுத்த சிரிப்புக்கு மேட்சில் அந்த ஆட்டிட்யூட் காட்டிய டேவிட்க்கு பிரவீன் கொடுத்த பதிலடியும் அந்த மூன்று பேருக்குமே தெரியும், பேசி அசிங்கப்பட வேண்டாம் என்று நினைத்தான் டேவிட்.
ஆனால் வலிய வம்பிழுத்தாள் விஜி, "என்ன, டேவிட் ஜி, செம்ம மேட்ச் போல," என்றாள் விஜி.
"ஆமாம் விஜி, அன்னிக்கு என்ன ஹைலைட்டா இருந்துது" என்றாள் காயத்ரி.
டேவிட்க்கோ கோபம் ஏறியது.ஆனால் கண்ட்ரோல் செய்துகொண்டான்.
"பட் டேவிட் அண்ணா, நீங்க செம்ம பாஸ்ட் பவுலர் னு அன்னிக்கு எங்க பிரென்ட் சொன்னாரு, அதேபோல பாஸ்ட்டா இருந்துது உங்க பால், கிரௌண்ட் விட்டு வெளில பறக்கும்போது" என்று சொல்லி சிரித்தாள் காயத்ரி.
டேவிட்டின் முகம் அஷ்டகோணலாக மாறியது.
"காயு, சும்மா இரு" என்று விஜி அதட்டினாள்.
காலேஜ் வாசலில் கார் நின்றதும், ரோஸெலின் மற்றும் காயத்ரியை "நீங்க போங்க, நான் விஜி கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று கூறினான் டேவிட்.
"என்ன பேசணும், அதெல்லாம் வேணாம், எங்களுக்கு டைம் ஆகுது, விஜி வாடி போகலாம்" என்றாள் காயத்ரி.
"காயத்ரி, அதிக நேரம் எடுக்காது, நீ போ விஜி வருவா" என்றான் டேவிட்.
காயத்ரியை போகும்படி கண் காட்டினாள் விஜி.
இருவரும் சென்றனர்.
"விஜி, கொஞ்சம் கார் ல உக்காரு, " என்றான் டேவிட்.
"எதுக்கு, அதெல்லாம் வேணாம், என்ன விஷயம் னு சீக்கிரம் சொல்லுங்க, எனக்கு டைம் ஆகுது" என்றாள் விஜி.
"விஜி, நானும் அஞ்சாறு தடவை உன்கிட்ட சொல்லணும் னு ட்ரை பண்ணேன், பட் அதுக்கான சிச்சுவேஷன் அமையல, பட் இனிமேலும் சிச்சுவேஷன்க்கு வெய்ட் பண்றது நல்லா இல்ல, அதான்....." இழுத்தான் டேவிட்.
"ஹலோ...என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க" என்றாள் விஜி.
கையில் ஒரு சிறிய கிரீட்டிங் கார்ட் கொடுத்து, "ஐ லவ் யு விஜி" என்றான் டேவிட்.
சற்றும் இதை எதிர்பார்க்காத விஜி அதிர்ச்சியில் விழித்தாள்.
சுதாரித்துக்கொண்டு, "என்ன உளறிட்டு இருக்கீங்க, அப்டி எந்த ஒரு எண்ணமும் எனக்கு இல்ல, நான் நல்லா படிக்கணும், அது ஒண்ணு தான் எயிம். சும்மா ஏதாவது இப்டி லூசு மாதிரி பண்ணிட்டு இன்னொரு முறை என்கிட்டே பிஹேவ் பண்ணாதீங்க, ஐ ஹேட் ஸச் தின்க்ஸ், என்னோட பிரெண்டோட பிரதர், அந்த மரியாதைய காப்பாத்திக்கோங்க" என்று கோபமாக சொல்லிவிட்டு கிரீடிங்கை அவன் கையில் மீண்டும் கோபமாக கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள் விஜி.
"விஜி, நான் சொல்றத கேளு, ஏன், ஏன் என்ன புடிக்கல?, அந்த கடலூர் பையன லவ் பண்றியா நீ" என்று டேவிட் கேட்க,
பத்தடி தாண்டி போய் இருந்த விஜி திரும்பி டேவிட்டின் அருகில் வந்தாள்,"அது உனக்கு தேவை இல்லாத விஷயம், நீ யாரு, இனிமே என்கிட்டே இப்டி ஒரு எண்ணத்தோட நீ வந்தேன்னு வெச்சுக்கோ மரியாதை கெட்டுடும், பிரவீன் பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல, அவன் என் பிரென்ட்,தட்ஸ் இட்.உன்னோட ஸ்டுப்பிடிடிக்கு தான் என்னோட பிரவீன் உனக்கு நல்லா ஆப்பு வெச்சான் இல்ல, நீ இப்டி என்கிட்டே பேசினது அவனுக்கு நான் சொல்றதும் சொல்லாததும் உன்னோட பியூச்சர் அப்ப்ரோச்ல தான் இருக்கு, ஆனா ஒரு விஷயம், அவன்கிட்ட நீ இப்டி நடந்துக்கிட்டேன்னு சொல்லிட்டா உனக்கு அது நல்லா இருக்காது," என்றாள் விஜி. அவள் பேச்சில் கோபத்தின் அனல் பறந்தது.
"உன்னோட பிரவீன் ஆஹ்?என்ன உன்னோட பிரவீன்?அவன் என்ன உனக்கு பாத்த மாப்பிள்ளையா? ஒரு விஷயம், நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன்" என்றான் டேவிட்.
"சின்ஸியராவா, சின்ஸியர்னா என்னன்னு தெரியுமா உனக்கு, நீ சின்சியரா லவ் பண்ற பொண்ணு யாரை லவ் பண்ரான்னு கூட தெரில, அவ மனசுல என்ன இருக்குன்னு தெரில, அவளுக்கு எது புடிக்கும் புடிக்காது, என்ன அப்ப்ரோச் வேணும், அவளோட ஆசை எண்ணம் எல்லாம் என்ன...இதுல ஏதும் தெரில, அவ முதல்ல காதலுக்கு தயாரா...இது சரியான நேரமா காதல சொல்ல....ஏதும் தெரில.அவளை இம்ப்ரெஸ் பண்ண தெரில, அவளுக்கும் இன்னொரு பையனுக்கும் என்ன மாதிரி உறவுன்னு புரிஞ்சுக்க தெரில, எனக்கு பாத்த மாப்பிள்ளையான்னு அவனை கேக்கற,ஒரு நம்பிக்கை இல்ல, உன் லவ் மேல கூட நம்பிக்கை இல்ல,என்ன???வெள்ளை தோல் பாத்து ஆசை பட்ரியா???இல்ல சதைகளை பாத்து ஆசை பட்ரியா?இதெல்லாம் ஜஸ்ட் கொஞ்ச நாள் தான். எல்லாத்துக்கும் மேல ஒருவாட்டி நீ அதை பாத்துட்டா அடுத்தவாட்டி அந்த எல்லா இம்ப்ரெஷனும் மறைஞ்சு போய்டும். உருவத்தை பாத்து வந்த ஜஸ்ட் ஒரு அற்றாக்ஷன் தான் இது உனக்கு.அது எந்த பொண்ணை பாத்தாலும் உனக்கு வரும். என்னைவிட நல்ல ஸ்டர்ட்ச்சரா ஒரு பொண்ணை பாத்தால் என்னை விட்டுட்டு அவளை உன்னோட மனசு நினைக்கும், அது மட்டும் இல்ல, அன்னிக்கே நான் பாத்தேன், உன்னோட கண்கள் என்னை தப்பான இடங்கள் ல பாத்துச்சு, ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ, நீ எல்லாம் ப்ரவீணோட கால் தூசிக்கு வரமாட்ட, அவன் என் கண்ணை தாண்டி பேசினது இல்ல,போ போ, இதுக்கு பேரு தான் சின்சியாரிட்டி யா? உனக்கு இப்டி பேச வெக்கமா இல்ல?காரி துப்பரதுக்குள்ள போய்டு அது தான் உனக்கு நல்லது" என்றாள் விஜி.
"ஏய், என்ன ஓவரா பேசற, அவன் என்ன உன்ன தொட்டுட்டானா, அவன் உன்னை எப்படி பாக்கறான் னு உனக்கு எப்படி தெரியும்....மனச பாத்து லவ் பண்ணணுமாம், இவளோட உடம்ப பாத்து லவ் பன்னறேனாம். சொல்லிட்டா, இவ பெரிய அழகி....பெரிய ஸ்ட்ரக்ச்சர் வெச்சுருக்கா....போ டி... அவனுக்காக பேசற, என்கூட கம்பேர் பண்ண அவன் எனக்கு எந்த ஈக்வலும் இல்ல? மாச சம்பளத்துக்கு கூலிக்காரனா வேலை செய்யிற அனாதை நாய் அவன், அவனுக்கு சமமாவா என்னை பேசற, சுனாமில அந்த நாயும் செத்துருக்கணும், தப்பிச்சுருச்சு, என் வாழ்க்கைல வெளயாடுது, ஒரு விஷயம், என்னிக்கு இருந்தாலும் அவனை நான் பழி வாங்காம விடமாட்டேன், மண்ணை கவ்வ வெப்பேன், உனக்கு முன்னாடி அவனை தலை குனிய வெச்சு அவனை அவமானப்படுத்தறேன்" என்றான் டேவிட்.
" என்ன சொன்ன....அவன் என்னை தொட்டுட்டானா னு கேக்கற???இது தான் உன் லவ் ஆஹ் டேவிட், என்னோட பதில் கேட்டதும் என்கிட்டே இருந்து எது உன்னை இம்ப்ரெஸ் பண்ணுச்சோ, அது உனக்கு புடிக்கல இல்ல??? அதான் இம்மெச்சூரிட்டி இன் யுவர் வாட் யு செட் லவ்.....ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ, அவன் என்னை தொடர்த்துக்கு நெறய சான்செஸ் இருந்துது, ஆனா அன் இன்டெண்க்ஷனா கூட அவன் கை...கை என்னடா கை....அவன் கண் கூட என் உடம்ப தொடல. ச்ச...நீ எல்லாம் ஒரு மனுஷன்....அவன் மாச சம்பளத்துல வேலை செய்யிற கூலிக்காரன் தான், ஆனா உன்னமாதிரி வேலைக்கே போகாம தங்கச்சிக்கு ட்ரைவர் வேலைய பாத்துக்கிட்டு அப்பா காசுல ஓசி சாப்பாடு சாப்பிடல அவன். ஆமாம், அவனுக்கு சமமா உன்ன பேசினது தப்பு தான். அவன் என் மனசுல இருக்கான் னு வெச்சுக்கிட்டா,நீ என் செருப்புல தான் இருப்ப, அவன் அவ்ளோ உயரத்துல தான் இருக்கான், அனாதை னு சொல்றியே....உனக்கு நாக்குல நரம்பு இல்ல???அவன் அனாதை இல்ல டா, மணி மணியா பதினஞ்சு பேர் அவனுக்கு இருக்கோம், என்னையும் சேத்து, அவன் சுனாமில செத்துருக்கணும் னு சொல்ற.....அவன் யாரு தெரியுமா.....சுனாமில இன்னிக்கு நான் சாகாம இருக்கறது அவனால தான், நீ விரும்பறேன் னு சொன்ன இந்த வெள்ளை தோலும் சதை உருவமும் அவனாலதான் இன்னிக்கு உயிரோட இருக்கு,தெரிஞ்சுக்கோ, கடைசியா ஒண்ணு, அவனை நீ பழி வாங்கப்போறன்னு நீ சொன்னது அவனுக்கு தெரிஞ்சாலே உன்னை அவன் பழி வாங்கிடுவான், போ போ, போய் வேலைய பாரு, அவனப்பத்தி பேச உனக்கு எந்த அருகதையும் இல்ல, லவ் பன்றானாம், ப்ரொபோஸ் பண்ற மூஞ்சிய பாரு, சீ, உன்ன பாத்தாலே அருவருப்பா இருக்கு, இனிமே என் கண்ணு முன்னாடி வராத" என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள் விஜி.
டேவிடால் இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோபமாக காரை பண்ருட்டி நோக்கி செலுத்தினான்.
வகுப்பறையில்....
"என்ன டி, விஜி, நான் தான் அதுத்தது அந்த செந்தில் நாயோட க்ளாஸ் னு பயத்துல இருக்கேன், நீ என்னை விட பதற்றமா உக்காந்துட்டு இருக்க" என்றாள் காயத்ரி.
"இல்ல காயத்ரி....."என்று ஆரம்பித்து அவளுக்கும் டேவிடுக்கும் நடந்த வாக்குவாதத்தை சொன்னாள் விஜி.
"ஏய் விஜி, என்ன சொல்ற, அந்த லூசு டேவிட் இப்படியா பேசினான்" என்றாள் காயத்ரி.
"நானும் கோவத்துல என்னை பேசறேன் னு தெரியாம அதிகமா பேசிட்டேன் டி" என்றாள் விஜி.
"உண்மையாவே சொல்றேன் விஜி, நீ அதிகமா தான் பேசிட்டே, நீ பேசினதை பாத்தா எனக்கே நீ பிரவீனை லவ் பண்றியான்னு சந்தேகமா இருக்கு, எதுக்கும் நீ இனிமே அந்த பிரவீன் கூட டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணு டி" என்றாள் காயத்ரி.
"இல்ல காயத்ரி, அவன் நார்மலா தான் என்கிட்டே பழகறான் னு நெனைக்கிறேன், ஆனா நான் தான் அதிகமா அவனை எனக்குள்ள நினைக்கிறேன், இந்த ஒரு தவிப்பு ஏன் னு தான் டி புரியல. அந்த டேவிட் பிரவீனை பத்தி சொல்ல சொல்ல செருப்பால அடிக்கணும் போல கோவம் வந்துச்சு எனக்கு, ஆனா நான் எதுக்கு பிரவீன் என் மனசுல இருக்கான் னு டேவிட் கிட்ட சொல்லணும்??டேவிட் லவ் பண்றேன் னு சொன்னதும் எதுக்கு ப்ரவீனயும் டேவிடையும் கம்பேர் பண்ணனும், ஒரே குழப்பமா இருக்கு டி" என்றாள் விஜி.
"விஜி, மனச போட்டு கொழப்பிக்காத, ஒரு டூ வீக்ஸ் பிரவீன் அண்ட் டீம் கூட ஏதும் பேச்சு வார்த்தை வெச்சுக்காத, பிரவீன் எப்படி உன் மௌனத்தை எடுத்துக்கறான் னு பாப்போம், நான் நார்மலா எல்லார்கிட்டயும் பேசறேன், அவங்க யாரவது நீ எதுக்கு பிரவீன் கூட பேசல, அவன் ரொம்ப அப்செட்டா இருக்கான் னு சொல்றாங்களான்னு பாப்போம், ஈவென் ப்ரவீனே என்கிட்டே எப்படி உன்னோட சைலென்ட்டை சொல்றான் னு பாப்போம்" என்றாள் காயத்ரி.
"இது நல்ல எக்ஸ்பெரிமெண்ட் டீ, நான் அக்ரீ பண்றேன்" என்றாள் விஜி.
சற்று நேர பேச்சு போய்க்கொண்டிருந்தபோதே செந்தில் வகுப்பறைக்குள் வந்தான்.
பகுதி 27 முடிந்தது.
-----------தொடரும்-------------