ஒரு வார்த்தை கொல்லும்

நேரம் போவதே தெரியாமல் நடுநிசி வரை,
இருவரும் கதைத்து கதைத்து அயர்ந்த போது,
சட்டென தவறி விழுந்த ஒற்றை வார்த்தையால்,
இதுவரை பேசிய வார்த்தைகளெல்லாம் தீட்டாகி போனது..

இரவில் கலைந்த தூக்கத்தை போலவே..

ஒரு வார்த்தை வெல்லும்,
ஒரு வார்த்தை கொல்லும்..

எழுதியவர் : சையது சேக் (10-Sep-17, 4:38 pm)
பார்வை : 453

மேலே