கர்ப்பிணியின் ஆசை

வீட்டில் இருவரும் ஒன்றாய் சாப்பிடும் போது,
சாப்பாட்டின் கடைசி வாய் உணவை அவன் ஊட்டிய பின்னரே,
வயிறு நிறைந்ததாய் சொல்லி எழுந்து செல்வாள்..

இன்று சாப்பிடும் போதும் அதை ஞாபகபடுத்தி,
ஒரு வாய் எனக்கு ஊட்டி விடு என தொலைபேசியில் அவள் சொன்னதும்,
வாயிம் வயிறுமாய் இருப்பவளின் ஆசையை நிறைவேற்ற முடியாத வலியில்,

தான் சாப்பிட்ட ஒரு கவள உணவும் தொண்டையை அடைத்து கொண்டது அந்த வெளிநாட்டுவாசிக்கு..

எழுதியவர் : சையது சேக் (10-Sep-17, 4:36 pm)
பார்வை : 107

மேலே