மின்னல்
வான காரிகை
வாய் திறந்த புன்னகை!!!
மேகங்களின் மோகத்தீயில்
மூண்ட மின்சாரம்
நீல திரை வானின்
நீண்ட கிழிசல்!!
இயற்கை எழுதிவைத்த
மெலிந்த ஓவியம்!!
மாரி காலத்து
மன்மத பணம்!!
ஆனாலும்
அவனைப்போல தூரத்தில் இருந்து
அடித்தால் போதுமா???
கழனி நிறைய வா
மழையாய்!!!