மழை

நனைத்துச் செல்லும்
மழைத்துளியே,
காற்றோடு கலந்து வந்து
சிலிர்க்க வைக்கிறாய்...

உன்னால் தோன்றுதடி
அழகான வானவில்
அந்த வளைவில்
என்னை சிக்க வைக்கிறாய்...

நீ வந்ததற்கு அடையாளமாய்
மண் வாசம்,
தேடினாலும் கிடைக்காத
புது வாசம்...

மரித்து கொண்டிருக்கும்
விளை நிலமெல்லாம்,
உந்தன் வரவால்
பசுமையாகும்.....

வாடி வதங்கும்
செடி கொடி எல்லாம்
நீ தொட்டு போனால்
துளிர்விட தொடங்கும்...

நீ உடலுக்கு மட்டும்
குளிரூட்டவில்லை,
என் மனமும் உன்னால்
குளிருதடி........

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (12-Sep-17, 4:45 pm)
Tanglish : mazhai
பார்வை : 216

மேலே