நான் பாடுவேன்
பாட்டுக்காக நான் பாடுவேன் - அன்பு
பாசத்திற்காக என்றும் பாடுவேன் !
தீபத்தின் ஒளியாக நீயாடலாம்
தினம் வேகும் திரியென நானாகலாம்
நான் பாடும் சுவைநாதம் கலையாகலாம்
நாளை நடப்பதை அறியாமல் நிலை மாறலாம்.
இளந்தென்றல் சுகமான குளிராகலாம்
இதயமே வெடிக்கின்ற கதையாகலாம்
சிலைஎன்றும் கலையென்றும் சில பாடலாம்
சிரிக்கின்ற உனக்காக நான் பாடுவேன் !
சொன்னாலும் புரியாத புதிராகலாம்
சொந்தமாய் எண்ணியே நீவாழலாம்
சிவந்திடும் மலராக நான் என்றுமே
சிலகாலம் உனக்காக நான் பாடுவேன் !