தொடர்பு

தொடர்பில் இல்லாதவர்கள்,
தொடர்பு கொள்ள முடியாதவர்கள்;
தொடர்புகொள்ள விரும்பாதவர்கள்.

நாம்
தொடர்பு கொள்கையில்
அவர்களுக்கே பொய்யெனத் தெரிந்தும்
நம்மைச் சமாளிக்கிறார்களாம்.
நம் மனம்
நோகக் கூடாது என்று
ஒத்தட வார்த்தைகளில்
உளறுகிறார்கள்.

நேர்மையாய்
தோன்றவில்லை என்று
சொல்லியிருந்தால் தான்
நம் மனம்
ஆறுதலும், தேறுதலும்
அடையும்.

எழுதியவர் : கனவுதாசன் (16-Sep-17, 11:49 am)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : thodarpu
பார்வை : 38

மேலே