மீண்டும் பிறந்த பாரதி

தாயென்று நாட்டினை
பாடி அன்று மனமகிழ்ந்தேன்
தாயென்று அழைப்பதற்க்கு
கூசுகிறதே நாவு இன்றிவரின்;

நதிகளை இணைப்பதென
கனவு அன்று கண்டிட்டேன்
நனவாக்கவில்லையே
இன்றும் அக்கனவை இவர்;

பெண்டிரின் பெருமையை
ஊருக்கு உயர்த்தி உணர்த்தினேன்
கற்பழித்து கெடுத்து அழித்து
விட்டீரே பெண்குலத்தை;

சாதிகள் இல்லையென
எனதுதிரத்தால் அன்று எழுதினேன்
பிற்போக்கு சான்றிதழுக்கு
பேயாய் இன்று அலைகிறீரே;

பரிதவிக்கிறதே நெஞ்சம்
களிரின் கால்களில் மிதி பட்டு
பார்த்தனின் பதங்களிலே
பறந்து நான் சென்று விட்டேனென;

உயிருடனிருந்தால் விட்டுருப்பேனோ
எந்த ஒரு கயவனையும்
தூணுடைத்து வந்த சிங்கமுகத்தோனை
போல குடலைக்கிழித்து முடித்திருப்பேனே;

தேவி பராசக்தி ஒரே ஒரு முறை
மீண்டும் பிச்சையாகக் கொடு என்னுயிரை
மீட்டுத் தருகிறேன் உண்மை சுதந்திரத்தை
எனது நாட்டு மக்களுக்கு!

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (16-Sep-17, 11:21 am)
பார்வை : 47

மேலே