மனதுக்குள் நான்
என் முகத்தில்
வியர்வை வழிய,
உன் கைகள்
அனிச்சையாக துடைக்கிறதே......
மனதுக்குள் நான்
நினைப்பது,
வியர்த்து கொண்டே
இருக்க வேண்டுமென்று!
உன் இமைகள்
என் இமைகளை
பார்த்து பேசும்
வேளையில்......
மனதுக்குள் நான்
நினைப்பது,
இமையை மட்டும்
பார்த்தால் போதுமா என்று!
உணவை நீ
உண்ணும் பொழுதும்,
உணவை நான்
பரிமாறும் பொழுதும்,
மனதுக்குள் நான்
நினைப்பது,
மெதுவாகவே சாப்பிடு
என்று!
நீ காலை நீட்டி
அமரும் வேளையில்.......
நானும் காலை நீட்டி
அமர்கிறேன்.....
மனதுக்குள் நான்
நினைப்பது,
கால் விரல்களாவது
தீண்டி கொள்ளட்டுமே என்று!