பெற்றோர் இல்லம்
காலை பத்து மணி
இடம் :சமையலறை:
ஏங்க, நானும் ஆறு மாசமா காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்கேன் நீங்க என்னன்னா இன்னைக்கு நாளைக்குனு இழுத்துக்கிட்டே போறீங்க.
உங்க அம்மா அப்பாவை முதியோர் இல்லத்துல சேர்த்து விடுங்கனு சொல்லுறேன்ல.
அவங்க இம்சை தாங்க முடியலை.
எதுக்கெடுத்தாலும் என் பிராணை வாங்குறாங்க..
சமையலறையிலிருந்து மாலதியின் சப்தம் இடையில் கட்டப்பட்டிருந்த சுவர்களை கடந்து சென்று அம்மாவின் அறையிலிருந்த கார்த்திக் காதில் நாராசமாய் ஒலித்தது.
உன்னோடு பெரிய ரோதனையா போச்சு,
உன் கூட ஒரே வீட்டில் இருப்பதற்க்கு அது எவ்வளவோ தேவலை என்று மனதிற்க்குள் முணுமுணுத்தபடி வெளியே கிளம்பினான்..
இரவு பத்து மணி
இடம்: படுக்கையறை
என்னங்க, நானும் நம்ம குழந்தையும் எங்க அம்மா வீட்டு வரைக்கும் போய் மூன்று நாள் தங்கிட்டு வரோம்.
குழந்தையை பிரிந்து என்னால இருக்க முடியாது.இல்லனா உங்க கிட்ட விட்டுட்டு போயிருவேன்..
அதுக்குள்ளே நீங்க அவங்களை முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டுருங்க..
என்னங்க சரினு சொல்லுங்க.
முகத்தோடு முகமாய் உராய்ந்தாள்..
ம்ம்ம்ம் சரி ஒன்னு பன்னு,நீ அத்தை வீட்டுக்கு போய்ட்டு நேரா நான் சொன்ன முதியோர் இல்லத்துக்கு வந்து விடு,
நான் இங்க தேவையான எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு இருவரோடும் வந்து விடுகிறேன்.
அங்கே சேர்த்து விட்டுட்டு ஒன்றாக வீட்டுக்கு வரலாம் என்றான்..
மூன்றாம் நாள் காலை பத்து மணி.
இடம்:முதியோர் இல்ல வரவேற்பறை
இங்க உள்ள விதிகளை எல்லாம் சொல்லிட்டோம் பணத்தை இப்பவே கட்டிவிட வேண்டும்.
யாரை சேர்க்க போறிங்க,
பேரை சொல்லுங்க.
கார்த்திக்,மாலதி எங்க இரண்டு பேருக்குத்தான்.
அம்மா நீங்க குழந்தையை கூப்பிட்டு நம்ம வீட்டுக்கு போங்க,
என்னை கருவில் சுமந்து கஷ்டபட்டு வளர்த்து ஆளாக்குன உங்களை இந்த மாதிரி எடத்துல தனியா விட்டுட்டு என்னால போக முடியாது என்று சொல்லும் போதே குரல் தழுதழுத்தது.
நாளை நாங்க மனசாலும் உடலாலும் வயோதிகமாகி எங்களை என் பிள்ளைகள் இங்கு வந்து சேர்பதற்க்கு பதிலாக நாங்க திடகாத்திரமாக இருக்கும் போதே எங்களை இந்த சூழ்நிலைக்கு பழக்க படுத்தி கொள்கிறோம் என்று சொல்லி விட்டு திரும்பி பார்த்தான்.
முதியோர் இல்லம் என்ற பெயர் பலகை நிலை தடுமாறி பெயர்ந்து கீழே விழுந்தது.
மாலதியை போலவே..