காதல் பழக வா-32

காதல் பழக வா-32

தடைகள் வந்தாலும்
தகர்த்து உன்னை கரம்பிடித்து
நம் காதல் வாழ்க்கைக்குள்
கொண்டு செல்வேன்
காதல் நிலவே....
கலங்காதே நீ
உன்னை கடத்திச்செல்லும்
கள்வனாக நான் இருக்கேன்....

மது வீட்டிற்கு ஒருவழியாக ஒட்டுமொத்த குடும்பமும் போய் சேர்ந்தது...மதுவை எதிர்பார்த்த அவள் அப்பா இந்த கூட்டத்தை பார்த்து கொஞ்சம் பயந்து தான் போனார்...

"வராத விருந்தாளியெல்லாம் வந்துருக்கீங்க, அதுவும் மதுவுக்கு ஒரு நல்லது நடக்கும்போது இத்தனை பேரும் வந்துருக்கறது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு, இருந்து நிச்சயத்தை நல்ல முறையில நடத்திக்குடுத்துட்டு தான் போகணும்,உங்க எல்லாரோட ஆசியும் என் பொண்ணுக்கு கிடைச்சா அவ வாழ்க்கை சுகபோகமா இருக்கும்"

"நீங்க சொல்ற மாதிரி மதுவோட வாழ்க்கை கண்டிப்பா சுகபோகமா தான் இருக்கும், அத பத்தி தான் பேச வந்திருக்கோம், நாங்க பேசறதை கொஞ்சம் பொறுமையா கேட்கணும்"

அதற்கும் மேல் அவர்கள் பேசியதெல்லாம் மது அப்பாவின் பொறுமையை சோதித்து தான் பார்த்தது...

"என்ன பேசறீங்க, உங்க பையன் விரும்பினா அதுக்காக என் பொண்ண கட்டிக்குடுத்துருவேன்னு நினைச்சீங்களா, பெரிய மனுஷனா இருக்கீங்கன்னு பொறுமையா பேசிட்டு இருக்கேன், என் பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்க போற நேரத்துல பஞ்சாயத்தை இழுக்க வந்துருக்கீங்களா, நான் ஏற்கனவே என் பொண்ண தர்றதா வாக்கு கொடுத்துட்டேன், இனி பேச ஒன்னும் இல்லை, தயவுசெஞ்சு எல்லாரும் இங்கிருந்து கிளம்புங்க, மாப்பிள்ளை வீட்ல இருந்து வர நேரம் ஆச்சி..."
"சம்மந்தி நாங்க சொல்றத கொஞ்சம் கேளுங்க"

"சம்மந்தினு உறவுமுறை சொல்லி கூப்பிட நான் என்னோட பொண்ணை தர போறதில்லை, ஏதோ என் பொண்ணு ஆசைப்பட்டாளேன்னு தான் அங்க அனுப்பி வச்சேன், சோத்துக்கு இல்லாம இல்ல, நீங்க சம்மந்தம் பன்றேன்னு சொன்னா வாலாட்டிட்டு உங்க பின்னாடியே சேவகம் பண்ண நாங்க எந்தவிதத்துலயும் உங்களுக்கு குறைஞ்சவங்களும் இல்லை..நான் குடுத்த வாக்கை காப்பாத்தறதுக்காக எத வேணா இழப்பேன்,என் பொண்ண அந்த பையனுக்கு தான் கட்டி கொடுப்பேன்,இனி பேச ஒன்னும் இல்லை, இங்கிருந்து பிரச்னையை வளர்க்காமா கிளம்பினா நல்லா இருக்கும்"
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசிவிட்டு உள்ளே சென்ற மதுவின் அப்பாவை எப்படி சமாளித்து ராம், மதுவை சேர்த்து வைப்பது என தெரியாமல் மொத்த குடும்பமும் கதிகலங்கி நின்றது...
என்ன சொன்னாலும் மதுவின் அப்பா கேட்கும் நிலையில் இல்லை, மீறி போனால் அங்கு தகராறு தான் நடக்கும்...அத்தனை பேரும் தனக்காக தலைகுனிந்து நிற்கும் நிலையை ராமால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..
"கண்ணா, நீ எல்லாரையும் கூட்டிகிட்டு கிளம்பு"

"என்ன ராம் சொல்ற, கிளம்பறதா, அப்போ நீ தனியா இங்க என்ன பண்ண போற"

"தெரில கண்ணா, நான் திரும்பி வந்தா மதுவோட தான் வருவேன், ஆனா எனக்காக இத்தனை பேரும் இங்க அவனமானப்படறத என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாதுடா..அதுமட்டும் இல்லை, இப்படி ஒரு சிச்சுவேஷன்ல நீங்க எல்லாரும் இங்கேயே இருந்தா பிரச்சனை தான் வரும், ப்ராப்லம் சரி ஆகாது, மது அப்பா ஏதாவது உங்களை சொல்லிட்டா காலம் முழுக்க ரெண்டு குடும்பமும் ஒருத்தருக்கொருத்தர் முகத்தை பார்த்துகிட்டு நல்லது கெட்டதுல கலந்துக்க முடியாது, அதுக்கு தான் சொல்றேன், எல்லாரையும் கூட்டிட்டு போ, நான் திரும்ப வரும்போது கண்டிப்பா மதுவை கூட்டிட்டு தான் வருவேன்"

"நீ சொல்றதெல்லாம் சரி கண்ணா, நீ இங்க தனியா என்ன செய்ய முடியும், நானும் ராதியுமாவது உன்கூட இருக்கோமே, மதுவோட அப்பாவுக்கு ராதி மேல கொஞ்சமாவது பாசம் இருக்கு, நானும் உன்கூட இருந்தா உனக்கு உதவியா இருப்பேன்ல"

"கண்ணா நான் சொல்றது உனக்கு புரியலயாடா, உங்களுக்கு இன்னும் ரெண்டு நாள்ல ரிஷப்ஷன், ஏதேதோ காரணத்தால் தள்ளிப்போன ரிஷப்ஷன் இப்போ உறுதியாகி ஏற்பாடாகி இருக்கு...அதுக்கு ரெடி ஆகற வழிய பாரு,பொண்ணும் மாப்பிள்ளையும் என்கூட இங்க இருந்தா ரிஷப்ஷன் எப்படி சரியா நடக்கும், ராதிய எவ்ளோ கஷ்டப்பட்டு கைபிடிச்சிருக்க, அத ஊரு உலகத்துக்கு சொல்ல வேண்டாமா, பேசாம நான் சொல்றத கேளுடா"

"ராம் உன்னை இந்த நிலமைல விட்டுட்டு நாங்க எப்பிடிடா போக முடியும்"

"மதுவும் நானும் காதலிக்கறது விட்டு பிரியறதுக்காக இல்லடா, ஜென்மம் முழுக்க சேர்ந்து வாழ தான்,எங்க காதல் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு, நீ தைரியமா போ, மதுவோட வரேன்"

ராம் வாய்ப்பேச்சு வீரன் மட்டுமல்ல செயல் வீரன் என்பதை அறிந்திருந்த கண்ணன் ராம் சொன்னது போல அத்தனை பேரையும் அங்கிருந்து கூட்டிக்கொண்டு சென்றான்...
"என்னங்க, ராமை இப்படி தனியா விட்டுட்டு எப்படி போறது, எனக்கென்னவோ மனசு கேட்கல"

"என்ன பண்றது ராதி, ராம் முடிவா சொல்லிட்டான், இனி அவன் முடிவை மாத்தறது கஷ்டம், அவன் சொன்னது மாதிரி மதுவோட தான் வருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, நாம இங்க இருந்து நம்மளால பிரச்சனை பெருசாகிட கூடாது,அது தான் முக்கியம்.நல்லதே நடக்கும், நம்பிக்கையோட போவோம்"
ராமை தவிர அத்தனை பெரும் அங்கிருந்து கிளம்ப ராம் மதுவை கைப்பிடிக்கும் வழியை யோசிக்க ஆரம்பித்தான்....

எழுதியவர் : ராணிகோவிந் (18-Sep-17, 11:08 am)
பார்வை : 416

மேலே