என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 44
"நானும் விழுப்புரம் வரேன்" என்றாள் விஜி.
"நீ எதுக்கு அக்கா, நான் மட்டும் போயிட்டு வரேன், நீ படி" என்றாள் ரம்யா.
"ஏய், எனக்கு எல்லாம் தெரியும் ,நான் வரேன், அவ்ளோதான்" என்றாள் விஜி.
"ஹலோ ஹலோ, இப்போ ஏன் இவ்ளோ கோவம்? முகம் எல்லாம் ரெட் ஆஹ் மாறிடுச்சு பாரு" என்றான் பிரவீன்.
"சரி, விஜி, நீயும் வா, சரி ஆன்டி, அப்போ நாங்க கெளம்பறோம், மொபைல் வாங்கிட்டு திருப்பி ரெண்டு பேரையும் இங்க டிராப் பண்ணிடறோம், ஓகே?" என்றான் முபாரக்.
"பிரவீன், நீ ரம்யாவை உன் வண்டி ல உக்கார வெச்சுக்கோ, விஜி நீ என்கூட வா" என்றான் முபாரக்.
"இல்ல அண்ணா, நான் பிரவீன் கூட வரேன், நீங்க ரம்யாவை கூட்டிக்கோங்க" என்றபடி பிரவீனின் வண்டியில் ஏறிக்கொண்டாள் விஜி.
அடுத்த அரைமணி நேரத்தில் வண்டி விழுப்புரம் யூனிவேர்சல் மொபைல் ஷாப்பில் நின்றது.
2005 -2006 வருடத்தின் சிறந்த மொபைல் நோக்கியா -6600 ரம்யாவுக்கு வாங்கப்பட்டது. விஜிக்கு மிகவும் பொறாமையாக இருந்தது. தனது கையில் இருக்கும் நோக்கியா 2600 போனை பார்த்தாள் விஜி. அது அவளை பார்த்து சிரித்தது.
இதை விஜய்யால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, கடையை விட்டு வெளியே வந்து நின்றுவிட்டாள்.
சற்று நேரத்தில் போனை வாங்கிவிட்டு மூவரும் வெளியே வந்தனர்.
"என்ன விஜி, நாங்க உன்னை உள்ளே தேடிக்கிட்டு இருந்தோம், போன் வாங்கும்போது ஏன் கூட நிக்கல" என்றான் பிரவீன்.
"இல்ல, எனக்கு போன் பத்தி என்ன தெரியும்? என்கிட்டே இந்த 2600 தான் இருக்கு, எனக்கு அதான் தெரியும், சோ, நான் கொஞ்சம் காத்தாட வெளில வந்து நின்னுட்டேன், சரி, மொபைல் வாங்கியாச்சா, ரம்யா, சந்தோஷமா?" என்றாள் விஜி.
"ம்ம்ம், ரொம்ப அக்கா, ரியலி முபாரக் அண்ணாவுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்," என்றாள் ரம்யா.
"ஹலோ, ஸ்பான்சர் பண்ணினது பிரவீன், எனக்கு எதுக்கு தேங்க்ஸ் " என்றான் முபாரக்.
"நல்ல மாடல் செலெக்ட் பண்ணினதுக்கு" என்றாள் ரம்யா.
"ஓஹோ, அப்போ சரி" என்றான் முபாரக்.
போனை வாங்கிக்கொண்டு திரும்பினர் நால்வரும்.
"உக்காரு விஜி" என்றான் பிரவீன்.
விஜி நேராக முபாரக் வண்டியில் ஏறிக்கொண்டாள்,"ஹலோ, வரும்போது என்கூட வந்த, இப்போ முபாரக் வண்டி ல போய் உக்காந்துக்கற,என்ன?" என்றான் பிரவீன்.
"ஏன் னா எனக்கு உன்கூட வர பிடிக்கல" என்றாள் விஜி.
"எதுக்கு இந்த கோவம், நான் என்ன பண்ணினேன்?" என்றான் பிரவீன்.
"நீ ஒண்ணும் பண்ணல, மூடிக்கிட்டு வந்தா போதும்" என்றாள் விஜி.
முபாரக் சிரித்துக்கொண்டான்.
வண்டி கோலியனூர் கூட்ரோட்டில் இருந்து வளவனூர் செல்லும் சாலையில் நுழைந்தது. வண்டியை ஓரமாக நிறுத்தினான் பிரவீன்.பின்னால் வந்த முபாரக்கும் அவர்களின் அருகில் வண்டியை நிறுத்தினான்.
வண்டியில் இறங்கிய விஜி ஒன்றும் புரியாமல் நின்றாள்.
"விஜி, நாளைக்கு என்ன டேட்" என்றான் பிரவீன்.
"ஏப்ரல் 15 " என்றாள் விஜி.
"என்ன எக்ஸாம் நாளைக்கு" என்றான் முபாரக்.
"சி ++" என்றாள் விஜி.
"எல்லாம் ஞாபகம் இருக்கா" என்றான் பிரவீன்.
"இருக்கு" என்றாள் விஜி.
"இல்லையே, நீ ஒண்ணு மறந்துட்டு" என்றான் பிரவீன்.
"என்ன, நான் எதையும் மரக்கல, எனக்கு எதுவும் மறக்கவும் மறக்காது" என்றாள் விஜி.
"இல்ல, கண்டிப்பா நீ ஒண்ணு மறந்துட்டு" என்றான் முபாரக்.
"அண்ணா, ப்ளீஸ் என்னை கொழப்பாதீங்க, நான் மறக்கல" என்றாள் விஜி.
"ஐயோ....எப்படி டென்சன் ஆகறா பாரு டா" என்றான் முபாரக்.
"பின்ன என்ன அண்ணா,எதுக்கு இப்டி என்னை கிண்டல் பண்றீங்க" என்றாள் விஜி.
"இல்ல அக்கா, நீ நெஜமாவே மறந்துட்ட" என்றாள் ரம்யா.
"ரம்மி, வாய மூடு" என்றாள் விஜி.
"விஜி, இப்போ எதுக்கு ரம்யாவ திட்ற, நீ நாளைக்கு உன் பிறந்த நாள் னு மறந்துட்ட, ஹாப்பி பர்த்டே" என்றபடி விஜய்க்காக வாங்கிய 2005 ஆண்டின் சிறந்த மொபைலான சோனி எரிக்சன் K750 I போனை எடுத்துக்கொடுத்தான் பிரவீன்.
விஜியின் முகம் பிரகாசமானது. "ஆமாம் நாளைக்கு என் பர்த்டே, எக்ஸாம் பிசி ல தான் மறந்துட்டேன், ஆனா உனக்கு எப்படி தெரியும்? " என்றாள் விஜி.
"உங்களுக்கு டிக்கெட் புக் பண்ணினேன் ஞாபகம் இருக்கா, அதுல உன் பர்த்டே ஏப்ரல் 15 1988 னு நான் எழுதினது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சோ, நீ உத்திரட்டாதி நக்ஷத்ரம், மீன ராசி, ரைட்?" என்றான் பிரவீன்.
முதன் முறையாக பிரவீனை கட்டிப்பிடித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் விஜி.
அந்த கணம், அண்ட சராசரங்களும் ஒரு நொடி ஸ்தம்பித்துவிட்டன ப்ரவீனுக்கு, "விஜி, சிஜி, என்ன, ஓவர் எக்ஸைட்மென்ட்" என்றான் பிரவீன்.
ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது விஜிக்கு.
"ஐ ஆம் ஓவர்வெல்ம்ட் டா, தேங்க்ஸ் பிரவீன் தேங்க்ஸ் எ லாட்" என்றாள் விஜி.
"இந்த மாதிரி ஒரு பர்த்டே விஷ் என் லைப்ல முதல் முறை டா பிரவீன்" என்றாள் விஜி.
"அது என் பாக்கியம், உன்னை சந்தோஷப்படுத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் இல்லையா டா" என்றான் பிரவீன்.
அன்றைய தினம்......விஜி தன் வாழ்வில் மிகவும் சந்தோஷமான நாளாக உணர்ந்தாள். அன்றிலிருந்து ப்ரவீனுக்கும் விஜிக்கும் இடையே நல்ல அந்நியோன்யம் உண்டானது. அடிக்கடி சந்தித்தும், போன் பேசியும் மெசேஜ் மூலமாகவும் மிகவும் நெருங்கிய சொந்தம் போல் ஆயினர்.
அடிக்கடி அர்ச்சனா ஹோட்டலும் கடலூர் - விழுப்புரம் தனியான பயணங்களும் அவர்களின் வாராந்திர நிகழ்வுகள் ஆயின.
பகுதி 44 முடிந்தது.
----------------------தொடரும்----------------------