என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 43
"என்ன விஜி, எப்படி இருக்க, மெசஜ் கால் ஒண்ணும் இல்ல?" என்றான் முபாரக்.
"அப்டி எல்லாம் இல்லேண்ணா, எக்ஸாம் இருக்கு, அதான்" என்றாள் விஜி.
"இட்ஸ் ஓகே விஜி" என்றான் முபாரக்.
"அது இருக்கட்டும், நீங்க ரெண்டு பேரும் ஏன் உம்முன்னு இருக்கீங்க, என்ன ப்ராப்ளேம்?" எண்டு விஜியாயும் காயத்ரியையும் பார்த்து கேட்டான் முபாரக்.
"அப்டி ஒண்ணும் இல்லையே அண்ணா, நாங்க நார்மலா தான் இருக்கோம்" என்றாள் காயத்ரி.
"எது, இது நார்மலா?" என்றான் பிரவீன்.
"நெஜமாவே அண்ணா, வேணும்னா விஜிகிட்ட கேட்டு பாருங்க" என்றாள் காயத்ரி.
விஜி மெளனமாக இருந்தாள்.
"என்ன விஜி, என்ன ப்ராப்ளேம் சொல்லு" என்றான் முபாரக்.
"அப்டி எல்லாம் ஒண்ணும் இல்ல அண்ணா, நான் நார்மலா தான் இருக்கேன், நெறையா பேர் நார்மலா இல்ல" என்றாள் விஜி.
"ஆமாம் அண்ணா, சில பேர், கொஞ்ச நாள் வரைக்கும் நெறையா பேர ஹர்ட் பண்ணினாங்க, நான் எடுத்து சொல்லி தான் அவங்களுக்கே தெரியும், ஆனா நான் செய்யாத தப்புக்காக என்கிட்ட சைலெண்டா இருக்காங்க" என்றாள் காயத்ரி.
"சோ, ஏதோ ப்ராப்ளேம் இருக்கு, ம்ம்ம், என்னன்னு இப்போ சொல்ல போறிங்களா இல்லையா? என்றான் பிரவீன்.
இருவரும் மௌனமாகவே இருந்தனர்.
"சோ, பிரச்சனை எங்களால தான் இல்லையா, அதனால தான் இந்த அமைதி இல்லையா?" என்றான் முபாரக்.
"அண்ணா, உங்களால இல்ல" என்றாள் விஜி.
"இப்போ சொல்ல போறிங்களா இல்லையா" என்றான் முபாரக்.
உள்ளே இருந்து காயத்ரியின் தந்தை வந்தார், "முபாரக், நான் சொல்றேன், எனக்கு அந்த லெக்ச்சரர் பத்தி ஏதும் தெரியாம அதுக்கு நீங்க பண்ணின ஹெல்ப் தெரியாம நீங்க காயத்ரிக்கு அடிக்கடி கால் பண்ணது எனக்கு பிடிக்கலன்னு விஜய்கிட்ட சொல்லி உங்ககிட்ட செல்ல சொன்னேன், அதுக்கு விஜி என்ன நடந்துச்சுன்னு சொல்லி புரிய வெச்சுருக்கலாம், ஆனா அதை விட்டுட்டு காயத்ரி கூட பேசறதை நிப்பாட்டிட்டா, அப்போ தான் எனக்கு புரிஞ்சுது, குழந்தை ல இருந்து காயத்ரி கூடவே இருந்து வளந்த விஜி, அவளை விட நீங்க முக்கியம் னு காயத்ரியை விட்டு இந்த ஒரு வாரம் ஒரு வார்த்தை கூட பேசாம இருந்தா, காயத்ரி டெயிலி நைட் நைட் வந்து அழுதுட்டே சொல்லுவா, என் தப்பு தான், உங்கள தப்பா நெனச்சது என் தப்பு தான், அதுக்காக இவங்க இப்டி பேசாம இருக்கறது என்ன நல்லாவா இருக்கு" என்றார்.
"இல்ல பிரவீன், இல்ல முபாரக் அண்ணா, இது என் தப்பு தான், நான் என் அப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்லி இருக்கணும், இது விஜி மேல எந்த தப்பும் இல்ல" என்றாள் காயத்ரி.
விஜி மெளனமாக இருந்தாள்.
"விஜி சாரி விஜி, என்னை நீ அடிக்கணும்னாலும் அடிச்சுடு, ஆனா டெயிலி என்னை நீ அவாய்ட் பண்ணிட்டு அந்த டேவிட் கூட கார் ல போறது எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு டி" என்று விஜியின் அருகில் வந்து உட்கார்ந்தாள் காயத்ரி.
விஜி அவளை முகம் கொடுத்து பேசவே இல்லை. அவள் கோபம் அவளது முகத்தில் தெரிந்தது.
"அண்ணா, என்ன விஷயம், சீக்கிரம் சொல்லுங்க, நான் கெளம்பனும்" என்றாள் விஜி.
"முபா, இரு டா" என்றபடி விஜியின் அருகில் வந்து உட்கார்ந்தான் பிரவீன்.
அவளது கையை மெல்ல தன் கைகளுக்குள் வைத்தான், "விஜி, ஒரு அப்பாவா அவர் பண்ணது கரெக்ட் தான், நல்லா யோசிச்சு பாரு, முதல் முறை உன்னோட அம்மா என்னை இப்படி ட்ரீட் பண்ணாங்க, பொண்ணை பெத்த எல்லாரும் இப்படி தான் டா யோசிப்பாங்க, பொண்ணை ஒரு நல்ல பையன் கைல புடிச்சு குடுக்கற வரைக்கும் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு தான் இருப்பாங்க, நல்லா யோசிச்சு பாரு, நாங்க அடிக்கடி கால் பண்ணும்போது அவரோட மனசு இப்படி எல்லாம் தவிச்சுருக்கும், மகள் கிட்ட சொல்லவும் முடியாம சொல்லாம இருக்கவும் முடியாம எவ்ளோ ஒரு சங்கடத்துல உன்கிட்ட சொல்லி இருப்பாரு, உன் கோவமும் நியாயம் தான், ஆனா நீ அவர்கிட்ட சொல்லி புரிய வெச்சுருக்கலாம், ஆனா, அவரை கஷ்டப்படுத்தலாமா, நாங்க எல்லாரும் ஜஸ்ட் அவ்ளோ தான் டா, நீ என்ன பண்ணினாலும் கஷ்டப்படமாட்டோம், எங்களுக்கு தெரியும், ஆனா காயத்ரி...பாவம், அவளை பாரு, கண்ணெல்லாம் கலங்கி போச்சு, அவளுக்கு நீ மட்டும் தான் பிரென்ட். நீ அவகூட பேசலைன்னா அவளுக்கு உலகமே இல்ல டா," என்றான் பிரவீன்.
விஜி காயத்ரியின் முகத்தை பார்த்தாள். கண்கள் கலங்கி ஒருவித ஏக்கத்தில் தான் இருந்தாள் காயத்ரி.
இருந்தாலும் ஒன்றும் பேசாமல் தரையை பார்த்தபடி இருந்தாள் விஜி.
"விஜி, இப்டி மௌனமா இருந்தா, எங்களால தான் உங்க பிரெண்ட்ஷிப் பிரிஞ்சு மாதிரி ஆய்டும், காயத்ரி அப்பாக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், போதாதுன்னா கை எடுத்து கும்பிடறேன், மன்னிச்சுரு" என்றான் முபாரக்.
"ஐயோ அண்ணா, நீங்க ஏன் இப்டி எல்லாம் மன்னிப்பு கேட்டுகிட்டு?" என்றாள் விஜி.
"இல்ல விஜி, எங்களால எந்த ஒரு நட்பும் பிரிய கூடாது, நட்பு ரொம்ப முக்கியம் விஜி, அதோட அருமை இப்போ புரியாது" என்றான் பிரவீன்.
"பிரவீன், அவ அப்பா பேசினது என்னை ரொம்ப ஹர்ட் பண்ணுச்சு, போதுமா? அது ஹீல் ஆக டைம் எடுக்கும்" என்றாள் விஜி.
"விஜி, நீ இவ்ளோ ஹார்டா காயத்ரி கிட்ட பிஹேவ் பண்ணாத, அவ பாவம், நீ இப்போ அவகிட்ட பேசலைன்னா, நாங்க உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசமாட்டோம்" என்றான் முபாரக்.
சட்டென விஜி கையில் இருந்த பீங்கான் காபி கோப்பை தவறி விழ, அதில் அவளது கால் பட்டு லேசாக கிழித்துவிட, ரத்தம் வர தொடங்கியது. எந்த ஒரு யோசனையும் இன்றி காயத்ரி நொடியில் ஓடிவந்து "நீ உக்காரு டி, ரத்தம் வருது பாரு, அப்பா, அந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடு எடுத்துட்டு வாங்க, விஜி கால் ல ரத்தம் வருது" என்றபடி சோபாவில் அமர்ந்திருந்த விஜியின் காலருகே உட்கார்ந்தது அவளது காலை தனது தொடை மேல் எடுத்து வைத்து கையில் வைத்திருந்த அவளது கைக்குட்டையால் ரத்தம் வரும் இடத்தை அழுத்தி பிடித்துக்கொண்டாள். ப்ரவீனும் அவளது அருகே உட்கார்ந்து "ஹைட்ரஜன் பெராக்ஸைடு எல்லாம் பத்தாது,டேய் முபா, நீ பக்கத்துல மெடிக்கல் போய் காட்டன், போரிக் ஆசிட், ஆன்டி பாக்டீரியல் சோப்பு, ஸ்டெராய்ல் பேண்டேஜ், கிளவ்ஸ், கொஞ்சம் காஸ் பீஸ், அப்டியே ஒரு டெட்டனஸ் டாக்சின் இன்ஜக்ஷன், ஒரு டிஸ்போ வேன் சிரஞ்...சீக்கிரம் வாங்கிட்டு வா" என்றபடி "விஜி, காயத்ரி அழுத்தும்போது உள்ள பீங்கான் பீஸ் இருக்கற மாதிரி உறுத்துதா?" என்றான் பிரவீன்.
"எனக்கு தெரில, ஆனா வலிக்குது" என்றாள் விஜி.
"பயப்படாத, காயத்ரி, ஒரு சின்ன ஹெல்ப், நீ விடு, கொஞ்சம் ஹாட் வாட்டர் ப்ளீஸ்" என்றான் பிரவீன்.
"அண்ணா நீங்க கொஞ்சம் இந்த ப்ளீடிங் வராம புடிச்சுக்கோங்க" என்றபடி காயத்ரி எழுந்தாள்.
"பிரவீன், நீ புடிக்காத, விடு, என் காலை...." விஜி முடிப்பதற்குள். "கொஞ்சம் சும்மா இருக்கியா, ரத்தம் வருது நெறையா, வாய மூடிக்கிட்டு உக்காரு" என்று மிரட்டலாக சொன்னான் பிரவீன்.
சற்று நேரத்தில் சூடு தண்ணீரும் வந்தது, முபாரக்கும் மெடிக்கல் சென்று வந்தான்.
"டேய் அந்த ஆன்டி பாக்டீரியல் சோப்பு குடு டா" என்று முபாரக்கிடமும், "காயத்ரி, அந்த ஹாட் வாட்டரை ஒரு அகலமான பக்கெட் ல குடு, கொஞ்சம் விலாவி குடு" என்றான் பிரவீன்.
அங்கனமே செய்தாள் காயத்ரி.
"இப்போ என்ன பிரவீன்?" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம்ம்.....போய் முபாரக் பக்கத்துல நில்லு" என்றபடி விஜியின் காலை துணியால் அழுத்தி இருந்த பிரவீன் மெல்ல விட்டு காலை சுடு நீர் இருக்கும் பக்கெட்டில் எடுத்து வைத்தான், வைத்த உடன் ரத்தம் அந்த தண்ணீரில் கலக்க தொடங்கியது, "ஆ...." என்று வலியில் கத்தினாள் விஜி.
காயத்ரி ஓடிச்சென்று அவளது காதுகளை பொத்தியபடி அவளை தன் இடுப்போடு கட்டிக்கொண்டாள்.
"பேசாம டாக்டர் கிட்ட போகலாம் பிரவீன்" என்றார் காயத்ரியின் தந்தை.
"அப்பா, பிரவீன் ஒரு லெப் டெக்னீஷியன் தான், டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்ட், அது மட்டும் இல்ல, பயோ கெமிஸ்ட்ரி தான் படிச்சுருக்கான், நீங்க பயப்படாதீங்க." என்றான் முபாரக்.
வலித்தாலும் பிரவீன் செய்யும் முதலுதவியை ஆச்சர்யமாக பார்த்தாள் விஜி.
மெல்ல கிழிந்திருந்த இடத்தில் சோப்பை வைத்து தேய்த்தான், சற்று நேரத்தில் விஜிக்கு வலி வெகுவாக குறைந்தது, ஒரு சிறிய பீங்கான் துகளை அவள் காயத்தில் இருந்து எடுத்தான் பிரவீன். பின்பு காலை சுடுநீரில் இருந்து எடுத்து பஞ்சை வைத்து துடைத்தான். க்ளாவ்ஸை மாட்டிக்கொண்டு காயத்தில் போரிக் ஆசிட் பவுடரை தூவி பேண்டேஜை போட்டான். அடுத்து டெட்டனஸ் டாக்சின் எனப்படும் டீ.டீ. ஊசியை எடுத்தான். "பிரவீன், எனக்கு ஊசின்னா பயம்" என்றாள் வீஜி.
"அய்ய...பப்பா....ஊசிக்கு பயப்படுது. ச்ச, கைல தான், சுடிதார் கைய தூக்கி வீட்டுக்கோ, காயத்ரி, இங்க ஊசி போடறத பாக்காம புடிச்சுக்கோ" என்றான் பிரவீன்.
நொடியில் ஊசியை போட்டு முடித்தான் பிரவீன். "கால் ல வலி ரொம்ப இருந்தா ஒரு பெயின் கில்லர் போடலாம், என்ன ஓகேவா?" என்றான் பிரவீன்.
"டேய்...லூசு, மூடிட்டு இரு, அதெல்லாம் வேணாம் விஜி, பெயின் அதிகமா இருந்தா ஈவினிங்கா டாக்டர் கிட்ட போய் போட்டுக்கோ" என்றான் முபாரக்.
"ஏன் அண்ணா, " என்றாள் காயத்ரி.
"ம்ம்ம், அது எங்க போடற ஊசி தெரியுமா?" என்றான் முபாரக்.
"ஐயோ, வேணாம், ஏதும் சொல்லவேணாம், எனக்கு புரிஞ்சு போச்சு, வலி எல்லாம் இல்ல, " என்றாள் விஜி.
"விஜி, பாத்தியா, உனக்கு கால் ல ரத்தம் வந்ததும் எந்த ஒரு யோசனையும் இல்லாம உன் காலை எடுத்து மடியில வெச்சு ரத்தத்தை அமுத்தி நிறுத்தினா பாரு காயத்ரி, அதான் நட்பு." என்றான் பிரவீன்.
"நிஜமா தான் பிரவீன், எனக்கு அவமேல கோவம் எல்லாம் இல்ல, பட் நான் என்னை நானே கண்ட்ரோல் பண்ணிக்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும். சாரி காயத்ரி, "என்றபடி அவளை கட்டி பிடித்துக்கொண்டாள் விஜி.
"அது இருக்கட்டும் நீங்க எதுக்கு வந்தீங்க" என்றாள் காயத்ரி.
"அதுவா, நம்ம முபாரக் கு அடுத்த மாசம் 14 அன்னிக்கு கடலூர் ல மேரேஜ், ரெசெப்ஷன் நம்ம பக்ஷி திருமண மண்டபத்துல, கண்டிப்பா நீங்க குடும்பத்தோட வரணும்" என்றான் பிரவீன்.
"அண்ணா, நிஜமாவா அண்ணா" சந்தோஷத்தில் திளைத்தாள் காயத்ரி.
"ஆமாம், கண்டிப்பா குடும்பத்தோட வரணும், உன்னோட பேமிலிக்கும் விஜி பேமிலிக்கும் தனி டெம்போ ட்ராவெல்லேர் அனுப்பறேன், ஓகே?கண்டிப்பா வரணும்" என்றான் முபாரக்.
"கண்டிப்பா வரோம்" என்று உத்தரவாதம் கொடுத்தார் காயத்ரியின் தந்தை.
"நெக்ஸ்ட் விஜி வீட்டுக்கு போய் அவங்களையும் இன்வைட் பண்ணனும், அப்போ நாங்க கெளம்பறோம் அப்பா" என்றான் முபாரக்.
"அப்பா, நானும் விஜி கூட போயிடு வரேன் அவ வீட்டுக்கு" என்றபடி காயத்ரியும் விஜியோடு நடக்க ஆரம்பித்தாள். "ஏன் நடக்கறீங்க, விஜி, நீ பிரவீன் வண்டில உக்காரு, காயத்ரி, நீ என் வண்டி ல உக்காரு" என்றான் முபாரக்.
"அண்ணா, கார் வாங்கறதா சொன்னாங்க நர்கீஸ் அக்கா, எப்போ, என்ன ப்ராண்ட்?" என்றாள் விஜி.
"ம்ம்ம், வாங்கியாச்சு, ஹூண்டாய் அக்ஸெண்ட்.விஜய் அண்ட் ரியாஸ் லோக்கல் ல எல்லாருக்கும் இன்விடேஷன் குடுக்க எடுத்துட்டு போயிருக்காங்க, வாப்பாவை கூட்டிகிட்டு." என்றான் முபாரக்.
விஜி வீட்டின் வாசலில் இரண்டு வண்டிகளும் nindrana.
"என்ன டி, கால் ல கட்டு, " என்றபடி வெளியே வந்தாள் புவனா.
"இல்லம்மா, க்ளாஸ் லைட்டா கிழிச்சுருச்சு, ஒண்ணும் பிரச்சனை இல்ல, நீ உள்ள வா, முபாரக் அண்ணா கல்யாணத்துக்கு இன்வைட் பண்ண வந்திருக்காரு" என்றாள் விஜி.
"அண்ணா, பைனலா மேரேஜா?" என்றபடி ரம்யா வந்தாள்.
"ஹே ரம்யா, வந்துட்டியா, எக்ஸாம் எப்படி டி பண்ணின" என்றாள் விஜி.
"ம்ம்ம், சூப்பர் அக்கா" என்றாள் ரம்யா.
"அம்மா, எக்ஸாம் முடிஞ்சதும் எனக்கு செல் வாங்கி தரேன் னு சொன்ன இல்ல" என்றாள் ரம்யா.
"தரேன் தரேன்" என்றாள் புவனா.
"இல்ல, நானும் விஜியும் பிரவீன் கூட விழுப்புரம் போய் செல் வாங்கிக்கறோம், என்ன முபாரக் அண்ணா கூட்டிட்டு போறிங்களா" என்றாள் ரம்யா.
"ஏய் அவர்களே கல்யாண பிஸில இருக்காங்க, அவங்ககிட்ட போய்" என்றாள் புவனா.
"இல்ல ஆன்டி, முடிச்சுட்டு விழுப்புரம் தான் போறோம்" என்றான் பிரவீன்.
"ஐயோ, இப்போ அது இல்ல, காசு??" என்றாள் புவனா.
"விடுங்க ஆன்டி, நாங்க வாங்கி குடுக்கறோம், ரம்யா டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட் எடுக்கறதுக்கு எங்க அட்வான்ஸ் கிப்ட்" என்றான் பிரவீன்.
"ஏய், இது நல்லா இல்ல பா, அதெல்லாம் வேணாம், அவங்க அப்பா வாங்கி தரேன் னு சொல்லி இருக்காரு" என்றாள் புவனா.
"அதை நீங்க வெச்சுக்கோங்க, ரம்யாவுக்கு எங்க கிப்ட் கன்பார்ம், நீ கெளம்பு ரம்யா" என்றான் பிரவீன்.
விஜிக்கு பிரவீன் ரம்யாவுக்கு கிப்ட் அது இது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனதிற்கும் பொறாமையாய் நின்றிருந்தாள்.
பகுதி 43 முடிந்தது.
----------------தொடரும்------------------