என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 42
அடுத்த சில நாட்கள் விஜியும் காயத்ரியும் தனது வாழ்நாளில் தனித்தனியாக கல்லூரிக்கு முதன்முறையாக சென்றனர். காயத்ரி வலிய சென்று பேசினாலும் விஜி சற்றும் அவளுக்கு முகம் கொடுக்கவில்லை, பலமுறை மெசேஜ் மூலம் மன்னிப்பும் கேட்டுவிட்டாள் ஆனால் விஜி சற்றும் மனம் இறங்கவில்லை. முபாரக் மற்றும் பிரவீனிடம் கூறலாம் என்றால் தவறு என்னவோ காயத்ரியின் மேல் தான். அதனால் குற்ற உணர்ச்சி வேறு. ஒரே ஒரு விஷயம், முபாரக்கும் ப்ரவீனும் காயத்ரியிடம் பேசவே இல்லை, இது தான் விஜி தகவலை அவர்களிடம் சேர்த்துவிட்டாள் என்பதற்கான அடையாளம். காயத்ரியை ஒதுக்கவேண்டும் என்பதற்காகவே நேரத்தோடு டேவிட்டுக்கு தொடர்பு கொண்டு அவனுடன் ரோஸெலின் சமேதம் கல்லூரிக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டாள் விஜி. அந்த சந்தர்ப்பத்தில் டேவிட்டின் பழக்க வழக்கமும் மிகவும் சாந்தமாக இருந்ததால் அவனுடன் ஒரு நல்ல நட்பை ஏற்படுத்திக்கொண்டாள் விஜி. அவளை பொறுத்தவரை காயத்ரியை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு வாரம் கழிந்தது. திடீரென ஒருநாள் முபாரக் காயத்ரிக்கு போன் செய்தான்.
"ஹலோ, காயத்ரி, எப்படி இருக்க" என்றான் முபாரக்.
அவ்வளவுதான். முபாரக் குரலை கேட்டவுடன் ஓவென அழுதேவிட்டாள் காயத்ரி.
"ஏய், என்ன டா ஆச்சு, எதுக்கு அழற" என்றான் முபாரக்.
"என்னண்ணா, தெரியாத மாதிரி கேக்கறீங்க, விஜி சொல்லி இருப்பாளே, அதனால தான நீங்க என்கூட பேசவே இல்ல. நீங்க மட்டும் இல்ல, யாருமே பேசல" என்றாள் காயத்ரி.
"விஜி சொன்னாளா, என்ன சொன்னாள்? என்ன பேசற நீ, கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு, விஜி என்கூட பேசி ஒரு வாரம் ஆகுது" என்றான் முபாரக்.
"அப்போ நீங்க ஏன் என்கூட ஒரு வாரம் பேசல?" என்றாள் காயத்ரி.
"ஹெலோ, நீங்க பேசல நீங்க பேசல ன்னு சொல்றியே, நீ கால் பண்ண வேண்டிது தான?" என்றான் முபாரக்.
"இல்ல ணா, ஒரு கில்டி கான்ஷியஸ் ல தான் நான் உங்களுக்கு போன் பண்ணல" என்றாள் காயத்ரி.
"சரி எனக்கு பண்ணல, வேற யாருக்காச்சும் பண்ண வேண்டிது தான" என்றான் முபாரக்.
"அது இருக்கட்டும், நீங்க தான் பிசி, மத்த எல்லாருமா பிசி, யாருமே எனக்கு பண்ணல" என்றாள் காயத்ரி.
"நீ என்ன குழந்தை மாதிரி பேசற? உங்களுக்கு எக்ஸாம் வருது, டிஸ்டர்ப் பண்ண வேணாம் னு நாங்க பண்ணல,நீங்களும் பண்ணல, சோ நாங்க எல்லாரும் நீங்க சின்சியரா படிக்கறீங்கன்னு நெனச்சோம்.விஜி மட்டும் எப்பயாவது ப்ரவீனுக்கு மெசேஜ் அனுப்புவா, ரம்யா சம் டைம்ஸ் விஜி போன் ல இருந்து மெசேஜ் பண்ணுவா ப்ரவீனுக்கு, அவ்ளோதான்" என்றான் முபாரக்.
"அப்போ விஜி ஒன்னும் சொல்லலையாண்ணா" என்றாள் காயத்ரி.
"இல்லையே, என்ன விஷயம்?" என்றான் முபாரக்.
"அண்ணா, நீங்க முடிஞ்சா நேர்ல வாங்க, ப்ளீஸ்" என்றாள் காயத்ரி.
"அதை சொல்ல தான் நானும் கூப்பிட்டேன், நானும் ப்ரவீனும் ஆன் தி வே" என்றான் முபாரக்.
"நிஜமாவா அண்ணா, வெல்கம்" என்றபடி சந்தோஷமாக போனை கட் செய்தாள் காயத்ரி.
உடனே தந்தையிடம் கூறினாள், "அப்பா, முபாரக் அண்ணாவும் ப்ரவீனும் வராங்க, ப்ளீஸ் அவங்க முன்னாடி ஏதும் சொல்லிடாதீங்க அப்பா" என்றாள் காயத்ரி.
"கண்டிப்பா ஏதும் சொல்ல மாட்டேன் போதுமா" என்றார் காயத்ரியின் தந்தை.
உடனே விஜிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாள் காயத்ரி, "தேங்க்ஸ் விஜி, என்னிக்குமே நீ என்னை ஹர்ட் பண்ண மாட்ட டி, எனக்கு தெரியும், நீ என்னோட பிரென்ட் னு சொல்லிக்கறதுல நான் சந்தோஷ பன்றேன் டி" என்று அனுப்பினாள் காயத்ரி.
விஜியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
ஒரு அரைமணி நேரம் கழிந்திருக்கும். முபாரக் மட்டும் காயத்ரி வீட்டிற்கு வந்தான்."வாங்க அண்ணா, என்ன சடன் விசிட்?" என்றாள் காயத்ரி.
"எல்லாம் ஒரு ஹேப்பி நியூஸ் சொல்ல தான், உள்ள வரலாமா?" என்றான் முபாரக்.
"வாங்க அண்ணா, அப்பா முபாரக் அண்ணா வந்திருக்காரு, பிரவீன் அண்ணா வாராருன்னு சொன்னீங்க? எங்க அவரு?" என்றாள் காயத்ரி.
"அவன் விஜி வீட்டுக்கு போயிருக்கான், வந்துருவான்" என்றான் முபாரக்.
"என்ன அண்ணா ஹேப்பி நியூஸ்?" என்றாள் காயத்ரி.
"இரு, அவனும் வந்துரட்டும்" என்றான் முபாரக்.
"சரி அண்ணா, அதுவரைக்கும் ஒரு காபி?" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம், தாராளமா" என்றான் முபாரக்.
விஜியின் வீட்டில்,
"வா பிரவீன், எப்படி இருக்க, என்ன சடன் விசிட்?" என்றாள் விஜி.
"வா பிரவீன், எப்படி இருக்க, பிரெண்ட்ஸ் எல்லாரும் நல்லா இருக்காங்களா?" என்றாள் புவனா.
"எல்லாரும் நல்லா இருக்காங்க ஆன்டி, அங்கிள் ரம்யா எப்படி இருக்காங்க" என்றான் பிரவீன்.
"ரம்யாக்கு பப்லிக் எக்ஸாம் நடக்குது, நாளைக்கு லாஸ்ட் எக்ஸாம், 1150 எதிர்பாக்கரா. அங்கிள் உன் புண்ணியத்துல நல்லா இருக்காரு" என்றாள் புவனா.
"என்ன ஆன்டி என் புண்ணியம் னு சொல்றீங்க" என்றான் பிரவீன்.
"எனக்கு எல்லாம் தெரியும் பிரவீன்" என்றாள் புவனா.
"ஆன்டி....நீங்க வேற.....விஜி ஏன் ஆண்டிகிட்ட சொன்ன?" என்றான் பிரவீன்.
"சத்தியமா நான் சொல்லல, எனக்கே அம்மாக்கு தெரியும் னு இப்போதான் தெரியும், எப்படி அம்மா உனக்கு தெரிஞ்சுது" என்றாள் விஜி.
"அப்பா தான் சொன்னார், பொண்ணா உன்கிட்ட மறைக்கலாம், பொண்டாட்டியா என்கிட்டே மறைக்க மாட்டாரு" என்றாள் புவனா.
"ஆன்டி ஒண்ணும் பெருசா எல்லாம் செய்யல, விஜி சொல்லி பீல் பண்ணாங்க, ஒரு நல்லா படிக்கற பொண்ணு, அதும் ஒரு தங்கச்சி, ரெண்டு பொண்ணுங்க இருக்கற வீடு, அதான் ஆன்டி....எனக்கு தெரியும், ஒரு சின்ன பையன் சொல்றான் னு அங்கிள் ரொம்ப பீல் பண்ணிருப்பாரு" என்றான் பிரவீன்.
"இல்லப்பா, இப்டி ஒரு புள்ள எங்களுக்கு இல்லையேன்னு சொன்னாரு" என்றாள் புவனா.
"அதுக்கென்ன ஆன்டி, உங்க வீட்ல பொறக்கலன்னா என்ன, உங்க புள்ள மாதிரி நெனச்சுக்கோங்க" என்றான் பிரவீன்.
"சரி, பேசிட்டு இருங்க, காபி எடுத்துட்டு வரேன்" என்றாள் புவனா.
புவனா சென்றதும், "என்ன விஜி ரொம்ப பிசியா?" என்றான் பிரவீன்.
"இல்ல பிரவீன், ஸ்டடீஸ், பட் ரியலி மிஸ் யூ எ லாட், இப்போ உன்னை பாத்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றாள் விஜி.
"எனக்கும் தான், மேட்ச் நெக்ஸ்ட் வீக் ஆரம்பிக்கிது, ஆனா நான் தான் இந்த இஞ்சுரிஸ் இன்னும் ஆறலைன்னு அன்பிட். ரொம்ப வருத்தமா இருக்கு, ஜஸ்ட் முதல் நாலு மேட்ச் கு தான் அன்பிட். அதுக்கப்புறம் டெஸ்ட் இருக்கு, அதுல கிளியர் பண்ணிட்டா நெக்ஸ்ட் ரவுண்ட் விளையாடலாம்." என்றான் பிரவீன்.
"ம்ம்ம், அது சரி, இப்போ என்ன திடீர் விஜயம்" என்றாள் விஜி.
"எல்லாம் சீக்ரெட், முதல்ல நாம காயத்ரி வீட்டுக்கு போகலாம், முபாரக் அங்க இருக்கான்" என்றான் பிரவீன்.
"நீ போய்ட்டு வா பிரவீன், நான் வரல, " என்றாள் விஜி.
"ஏன், நான் உன்னை கூட்டிட்டு வரேன் னு முபாரக் கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன், ப்ளீஸ் வா' என்றான் பிரவீன்.
"இல்ல, முக்கியமான வேலை இருக்கு" என்றாள் விஜி.
"எனக்காக வருவியா மாட்டியா விஜி" என்றான் பிரவீன்.
"ஐயோ...புரிஞ்சுக்க மாற்றியே, இணைக்காக வரேன். பட் சீக்கிரம் திரும்பி வந்துடனும்" என்றாள் விஜி.
"கண்டிப்பா" என்றான் பிரவீன்.
காபியை குடித்துவிட்டு காயத்ரி வீட்டிற்கு புறப்பட்டனர் இருவரும்.
விஜி பெருத்த யோசனையில் ஒரு குழப்பமான மனநிலையில் வருவது போல் உணர்ந்தான் பிரவீன்.
"விஜி, உனக்கு வர பிடிக்கலைன்னா வேணாம், உன்னோட முகம் சரி இல்ல" என்றான் பிரவீன்.
"இல்ல, பரவால்ல, வா, நான் நார்மலா தான் இருக்கேன்" என்றாள் விஜி.
இருவரும் காயத்ரி வீட்டை அடைந்தனர்.
"வாங்க பிரவீன், வா விஜி" என்று இருவரையும் வரவேற்றாள் காயத்ரி.
பகுதி 42 முடிந்தது.
------------------தொடரும்----------------