முதியோர் இல்லம்

மாலதி...
ஏய் மாலதி உள்ளே இன்னும் எவ்வளவு நேரம்தான் சாம்பார் வைச்சிக்கிட்டு இருப்ப..
பையனை இன்னைக்கு பள்ளிக்கூடத்துல சேர்க்கனும்னு தெரியாதா,கூட்டம் சேர்வதற்க்குள்ளே சீக்கிரமாய் போய்ட்டு வந்து ஆபிஸ்க்கு வேற போகனும்டி.
கார்த்திக்கின் குரல் சமையல் கூடத்தில் காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தவளின் காதில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது..
என்னங்க நான் என்னமோ இங்க ஆற அமர இருந்து டிவில சீரியலா பார்த்துக்கிட்டு இருக்குற மாதிரி பேசுறீங்க,
எனக்கும் ஆபிஸ் போக நேரமாகுது. வந்து கொஞ்சம் கூடமாடா உதவி செய்யுங்கனு சொன்னால் அங்க நின்னுக்கிட்டு என்ன சத்தம் போடுறீங்க. உங்களை கட்டிக்கிட்டு என்னத்ததான் கண்டேன் என்று கடுகாய் பொறிந்தாள்..

டேய் சிவா கண்ணு வாடா, உங்க அம்மா இன்னைக்கு முழுக்க கரடி மாதிரி கத்திக்கிட்டேதான் இருப்பா.
உனக்கு போற வழியில் ஓட்டல்ல சாப்பாடு வாங்கி தாரேன் ஸ்கூல்க்கு நேரமாகுது..
பைக்கில் ஏறி கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் அறை அருகே இறங்கி கொண்டனர்..
அப்பா உன்னை பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டுட்டு சாயங்காலமா வந்து கூட்டிட்டு போறேன்.சேட்டை பன்னாமல் சமத்தா இருக்கனும் சரியா..

அப்பா...
என்னை சாயங்காலம் வீட்டுக்கு கூப்பிட்டு போக வருவீங்களா.இல்லை என்னையை இங்கேயே விட்டுட்டு இனி பார்க்கவே வரமாட்டீங்களா.நீங்க பொய்தானே சொல்லுறீங்க சிவாவின் குரல் மெல்ல உடைந்து கண்களில் நீர் முட்டியது..
ஏன்டா அப்படி சொல்லுற பள்ளிக்கூடம் எட்டு மணி நேரம்தான்டா அதுக்கு பிறகு உன்னை கூப்பிட்டு போய்ருவேன்டா.
அதுவும் நீ எனக்கு ஒரே புள்ளை உன்னை பிரிஞ்சு எங்களால் இருக்க முடியாதுடா,.

அப்போ நீங்களும் தாத்தாவுக்கு ஒரே பிள்ளைதானே அவங்களை மட்டும் ஆறு மாசமா எப்படிப்பா பிரிஞ்சு இருக்க முடியுது..
தாத்தா மேல உனக்கு பாசமே இல்லையாப்பா.
நீ என் மேல அன்பா இருக்குற மாதிரிதான தாத்தாவும் உன் மேல பாசமா இருப்பாரு.
நானாச்சும் வளர்கிற குழந்தை,தாத்தா முதிர்ந்த குழந்தை மாதிரி அந்த குழந்தையை மட்டும் எப்படிப்பா பார்க்காமலே இருக்க முடியுது..
குழந்தையின் பேச்சில் வாயடைத்து வெட்கி தலை குணிந்தான்..

நாளைக்கு பள்ளிக்கூடத்துல சேர்த்துகலாம்.
இப்போ நாம தாத்தாவை வீட்டுக்கு கூப்பிட போவோம்.
இனிமேல் தாத்தா நம்ம கூடதான் எப்போதும் இருப்பார் என்று சொல்லி கொண்டே பைக்கை முதியோர் இல்லம் நோக்கி செலுத்தினான் கார்த்திக்.
தலை நிமிர்ந்து...

எழுதியவர் : சையது சேக் (17-Sep-17, 5:43 pm)
சேர்த்தது : சையது சேக்
Tanglish : muthiyor illam
பார்வை : 202

மேலே