ஒருபக்க காதல்கதை பாகம்-34

பாதி மயக்கம்
கண்ணில் பனி நனைத்த கண்ணாடிபோல் அனைத்தும் சிறு மங்கலாய் தெரிந்தது
காலில் வலி மழை பெய்த மிச்சம் மரத்திலிருந்து வீழ்வதுபோல் சிறுதுளியாய்
மனதில் அவள்....அவள் மட்டுமே
அருகில் தேடுகிறான்...
அம்மா: டேய்..கண்முழிச்சிட்டியா...தெய்வமே...உனக்கு ரொம்ப நன்றி..மா..(என வானத்தை பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்தாள்)
அவனின் கண்கள் அரை முழுதும் அவளை தேடியது
அவன்: அம்மா ...அவ எங்க ?(என எழ முற்பட்டான்)
அம்மா: உன்ன அட்மிட் பண்ணி ஆப்பரேஷன் முடிஞ்சா கையயோட எங்கையோ போயிட்டாடா..போன் கூட சுவிட்ச் ஆப் னு வருது
அவன்: என்னமா சொல்ற..அவ எங்க இப்போ?
அம்மா: தெரிலடா..நானும் இங்க ஆஸ்பத்திரி வீடுனு ஓடவே சரியா இருக்கு....நீ பொழச்சு நல்லபடியா வருவியான்னு ஆயிடுச்சு..ஏதோ தெய்வம்தான்...(என கட்டி அணைத்தாள்)
அவன்: நீ கும்புட வேண்டிய தெய்வம் அவதான்மா, அவ இல்லனா இப்ப நா பேசிட்டு இருக்க முடியாது
அம்மா: ஆமா, அவ தான் உன்ன கொண்டு வந்து சேர்த்தா..சரி கருமாரியம்மன் கோவில் குங்குமம் எடுத்துட்டு வரேன் இரு(என நகர முற்பட்டாள்)
அவன் மனதில் தண்ணீருக்குள் நீச்சல் தெரியாமல் திணறும் வலியைப் போல் அவளைப் பார்க்கவேண்டுமென தவியாய் தவித்தது, பக்கத்திலிருக்கும் கைபேசியில் அவள் எண்ணை அழுத்தினான், மறுமுனையில் அதே சுவிட்ச் ஆப்.. எதற்கும் இருக்கட்டுமென அவள் வீட்டில் எழுதி வைத்திருந்த வாட்டர் கேன் நம்பரை சேமித்து வைத்திருந்தான் அதற்கு அழைத்தான்
கேன் காரர்: ஹலோ..கே.பி.கே வாட்டர்..
அவன்: நம்பர் 7, தணிகாசலம் தெரு வீட்டுக்கு கேன் போட்டுடீங்களா ?
கேன் காரர்: நேத்துதான் போட்டேன், இன்னொரு கேன் வேணுமா சார்..சாய்ங்காலமா போடட்டுமா
அவன்: வேண்டாம். தேங்க்ஸ் சார்
அவள் வீடு மாறவில்லை..இப்போது அவன் அவள் வீட்டிற்கு எப்படியாவது போயாக வேண்டும்..காலில் கட்டு..நடப்பது கடினம்..அம்மா..அவனுக்கு அவளை பார்த்தே ஆகவேண்டுமென எண்ணம் தலை விரித்தாடியாது..இதுவே சினிமாவாய் இருந்திருந்தால்..சலைன் பாட்டிலை பிய்த்து எறிந்துவிட்டு ஓடி இருக்கலாம்...இது கேவலம் நிதர்சனம்
கட்டு பிரிக்கும் வரை காத்திருந்தே ஆகவேண்டும், ஆனால் அவனுக்கொரு நண்பன் இருக்கிறான்..அவன் ஏன் வரவில்லை?
அவன்: அம்மா அந்த நாய் எங்கம்மா போனான் ?
அம்மா: அவனுக்கு வெளிநாட்ல வேலை கெடைச்சு போயிட்டானே, உனக்கு அச்சிடேன்ட் ஆனா அதே நாள் அவன் போயிட்டான்..நானும் அவன கூப்பிடல (என மாத்திரை வாங்க வெளியே சென்றாள்)
அவள் போனபின் நண்பனுக்கு கால் செய்தான். சுவிட்ச் ஆப்
இப்போது வேறு ஒரு நண்பன்,
நட்பு : ஹலோ..
அவன்: டேய் எங்க இருக்க...
நட்பு : டேய்.. உனக்கு சரி ஆயிடிச்சா..நடுல உன்ன வந்து பாத்தேன் நீ மயக்கமா இருந்த
அவன்: உடனே கெளம்பி வாடா
நட்பு: சரி வரேன் வெய்
தண்ணீரில் தத்தலித்தவனுக்கு இப்போதுதான் ஒரு கயிறு கிடைத்ததை போல்..ஓர் நிம்மதி அவன் மனதில்...அவன் வருவான் அவனை வைத்து அவள் வீட்டில் என்ன ஆனது..அவள் எங்கே போனாள்..என அனைத்தும் சாதித்துவிட வேண்டுமென மனதில் எண்ணிக்கொண்டான்..அவளைக் காணும் நேரத்தை எண்ணி மனது அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருந்தது...