என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 45

டோர்னமெண்ட் கோலாகலமாக தொடங்கியது. பல அணிகள் விளையாட சேர்ந்த நிலையில் கடலூர் அணிக்கு முதல் சுற்றில் உடல் நலம் காரணமாக ப்ரவீனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு முபாரக் அணியின் கேப்டன் ஆனான். ப்ரவீனுக்கு பதிலாக அணியில் சார்லெசின் சகோதரன் ஜோஸ் சேர்க்கப்பட்டான். இம்முறை போட்டிகள் தஞ்சை நகரில். நல்ல நகரம். விஜி ரம்யா காயத்ரி மூவரும் தஞ்சை நகரில் இருக்கும் நர்கீசின் தோழி ராதா வீட்டில் தங்க ஏற்பாடு செய்தாள் நர்கீஸ். திருமண நெருக்கத்தால் நர்கீஸ் போட்டிகளை காண vara முடியவில்லை.

முதல் போட்டி கடலூருக்கும் திண்டுக்கல் அணிக்கும் இடையே நடந்தது. பிரவீன் ஆடாத காரணத்தால் விஜி ரம்யா காயத்ரி மூவரும் ப்ரவீனோடு உட்கார்ந்து கேலரியில் இருந்து மேட்சை பார்த்தனர்.

டாசில் வென்ற திண்டுக்கல், முதலில் பேட்டிங் செய்தது.

ஒவ்வொரு சூழலிலும் பிரவீனின் யோசனைகளை கேட்டு தான் அணி செயல்பட்டது.

"என்ன பிரவீன், நீ வெளயாடலைனாலும் உன்னோட ஐடியா தான் விளையாடுது போல?" என்றாள் விஜி.

"அப்டி எல்லாம் இல்ல, திண்டுக்கல் கொஞ்சம் கஷ்டமான டீம்" என்றான் பிரவீன்.

"ஓ அப்படியா, " என்றாள் காயத்ரி.

"ஆமாம், நான் வெளயாடலைனு இன்னும் குஷியா இருப்பாங்க, நம்ம ஆளுங்க நான் ஆடலையேன்னு ஒரு டெங்ஷன்லயே வெளயாடுவானுங்க, அதான் பயமா இருக்கு" என்றான் பிரவீன்.

"ஆமாம், இவரு ஒருத்தரு ஆடினா அவங்க பயப்படுவாங்களாம், பிரவீன் ரொம்ப காமெடி பண்ற" என்றாள் ரம்யா.

"என்ன, ரம்மி, வாய மூடு' என்றாள் விஜி.

"ஏன், நீயே சொல்லு, இது ரொம்ப ஓவர் கான்பிடெண்டா இல்ல" என்றாள் ரம்யா.

"ரம்மி, சும்மா இருன்னு சொன்னேன்" என்று விஜி சொல்லிக்கொண்டிருக்கும்போதே முதல் ஓவரை வீசிய விஜய் ஓவரை வெளுத்து வாங்கினர் திண்டுக்கல் அணியினர். முதல் ஓவரில் இருபத்தி இரண்டு ரன்கள் விளாசினர் திண்டுக்கல்.

ஓவரின் முடிவில் முபாரக் விஜய்யிடம் "என்ன டா, நான் தான் சொல்றேன் இல்ல, லென்த் பால் போடாத டா, எல்லாம் ஷாட் பால் போடுன்னு" என்றான் முபாரக்.

"சாரி மச்சான்" என்றான் விஜய்.

அடுத்த ஓவரை வீச வந்தான் ரியாஸ்.

கேலரியில், "இந்த ஓவர் ல பாரு, முதல் ரெண்டு பந்து நல்லா போடுவான், மூணாவது பந்து அவனை இஷான் ஆக்குவாங்க, அதுது கோவத்துல தப்பு தப்பா போடுவான், வெழுத்துருவாங்க" என்றான் பிரவீன்.

"எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க" என்றாள் காயத்ரி.

"அதான் எக்ஸ்பீரியன்ஸ்" என்றான் பிரவீன்.

சொன்னது போலவே மூன்றாவது பந்தை விளாசினர். ஆட்டத்தின் போக்கு கடலூருக்கு எதிராக இருந்தது.

அந்த நேரம் அங்கு டேவிட் வந்தான்.

"என்ன விஜி, வாட் எ சர்ப்ரைஸ், நீ எங்க, ஓ, கடலூர் சப்போர்ட்டா?" என்றான் டேவிட்.

"வா டேவிட், எப்படி இருக்க" என்றான் பிரவீன்.

"ம்ம்ம், நல்லா இருக்கேன்" ஒரு வார்த்தை பதிலை கூறி விட்டு "விஜி, எங்க தங்கி இருக்க நீ?" என்றான் டேவிட்.

"நான் பிரென்ட் வீட்ல இருக்கேன்" என்றாள் விஜி,

"என்ன விஜி இன்டெரெஸ்ட் இல்லாம பேசற" என்றான் டேவிட்.

"நீ கூட தான் பிரவீன் கிட்ட இன்டெரெஸ்ட் இல்லாம பேசின" என்றாள் விஜி.

"விஜி நீ ஏன் எங்க ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணிகிட்டே இருக்க" என்றான் டேவிட்.

"டேவிட், ப்ளீஸ், நான் ஒரு மூட் சேன்ஜ்க்காக தான் இங்க வந்திருக்கேன், நீ கொஞ்சம் உன் வேலைய பாரு" என்றாள் விஜி.

"விஜி, நான் என்ன சொல்றேன் னா....."டேவிட் கூறி முடிப்பதற்குள், "ஹலோ டேவிட், அவங்க தான் உன்னை டிஸ்டர்ப் பண்ணாதான்னு சொல்றாங்க இல்ல, ப்ளீஸ் போ" என்றான் பிரவீன்.

"நான் உன்கிட்ட பேசல, ப்ளேடி ஷிட், எங்க இருந்து தான் வருவானுங்களோ" என்றான் டேவிட்.

"டேவிட் கொஞ்சம் நாக்கை அடக்கலாம் நீ" என்றான் பிரவீன்.

"உன்னோட திமிருக்கு தான் கடவுள் உனக்கு வெச்சுருக்காரு விளையாட முடியாம" என்றான் டேவிட்.

"ஆமாம் டா, இது என் கடவுள் குடுத்த தண்டனை தான், நீ உன் வேலைய பாத்துட்டு போ இங்க இருந்து" என்றான் பிரவீன்.

"நீ யாரு டா இதை சொல்ல, விஜி சொல்லட்டும் நான் போறேன், நான் அவளை லவ் பண்றேன்" என்றான் டேவிட்.

ஒரு நிமிடம் ப்ரவீனும் ரம்யாவும் ஆச்சர்யமாக விஜியை பார்த்தனர்.

"என்ன பாக்கற, அவ சொல்றாளா பாத்தியா, ஏன் னா லாஸ்ட் கொஞ்சநாளா அவளே போன் பண்ணி என்கூட கார் ல காலேஜ்க்கு வந்தா" என்றான் டேவிட்.

"ஹலோ டேவிட், அது என்மேல இருந்த கோவத்துல தான் அவ அப்டி பண்ணினா" என்றாள் காயத்ரி.

"டேவிட், ப்ளீஸ் போ, நான் உன்னை லவ் பண்ணல, போ, பிரச்சனை பண்ணாத" என்றாள் விஜி.

"விஜி, இவங்க எல்லாரும் இருக்காங்களேன்னு பயப்படாத. உண்மையா சொல்லு, நீ என்னை லவ் பண்ணல?" என்றான் டேவிட்.

"டேவிட், நீ என்ன இப்டி பண்ற, நான் உன்னை லவ் பண்ணல பண்ணல பண்ணல போதுமா" என்றாள் விஜி.

"அப்புறம் எதுக்கு டி என்கூட கார் ல வந்த, என்கூட சிரிச்சு சிரிச்சு பேசின, நான் என்ன உனக்கு ட்ரைவரா, லவ் பண்ணலேன்னா வேற எதுக்கு என்னை நீயே கால் பண்ணி என்னை கூட்டிட்டு போ கூட்டிட்டு போ னு கேட்ட, வேற ஏதாவது எதிர்பாத்தியா என்கிட்டே இருந்து" என்றான் டேவிட்.

"டேவிட் கொஞ்சம் வாய மூடு, மரியாதை கேட்டுடும்" என்றாள் விஜி.

"டேவிட், ப்ளீஸ் விடு, அவங்கள ஏன் டென்சன் ஆக்கர, விடு அவங்க முகம் மாறுது" என்றபடி டேவிட்டின் தோளில் கை வைத்து நகர்த்தினான் பிரவீன்.

சற்றும் எதிர்பாராத விதமாக பிரவீனை வேகமாக தள்ளிவிட்டான் டேவிட். தவறி கீழே விழுந்தான் பிரவீன்.

ஒரு நிமிடம் அனைவரும் பதறிவிட்டனர். விஜி பளார் என்று டேவிடை அறைந்தாள். இதை அவமானமாக நினைத்த டேவிட், மீண்டும் பிரவீனின் காலில் ஏற்கனவே காயமடைந்த இடத்தில் ஓங்கி உதைத்தான். காயத்ரி டேவிடை தள்ளினாள். ப்ரவீனுக்கு காயத்தில் இருந்து ரத்தம் வந்தது. விஜி மிகவும் கோபப்பட்டாள். "டேவிட், இப்போ போறியா இல்ல நான் போலீஸ் கு போன் பண்ணவா" என்றாள் விஜி.

"ம்ம்ம், போறேன் போறேன், ஆனா ஒண்ணு, நீ எப்படியும் ஒருநாள் என்கிட்டே வருவ" என்றபடி மீண்டும் பிரவீனின் காயத்தில் உதைத்தான் டேவிட்.

"டேவிட், போடா வெளில, நாயே" என்றபடி பிரவீனின் அருகே ஓடி வந்தாள் விஜி.

கண்கள் கலங்கிவிட்டது விஜிக்கு.

டேவிட் கோபமாக போய்விட்டான்.

"அவன் உன்னை அப்டி அடிக்கறான், நீ அப்டியே இருக்கியே, திருப்பி அடிக்க மாட்டியா, பாரு ரத்தம் வருது" என்றாள் விஜி.

"விடு விஜி, அவன் கெடக்குறான், தப்பு உன்மேல தான், என்னிக்கா இருந்தாலும் அவன் அப்டி சொல்லி காட்டிட்டே தான் இருப்பான்" என்றான் பிரவீன்.

"இரு இரு நான் எல்லார்கிட்டயும் இதை சொல்றேன்" என்றாள் காயத்ரி.

"இல்ல காயத்ரி, சொல்லாத, டேவிடை அடிச்சுடுவானுங்க, பெரிய பிரச்சனை ஆய்டும், அப்புறம் மேட்ச் விளையாட முடியாம பேன் பண்ணிடுவாங்க" என்றான் பிரவீன்.

"ஆமாம் காயத்ரி, மேட்ச் எல்லாம் முடிஞ்சதும் சொல்லலாம்" என்றாள் ரம்யா.

இதற்கிடையே மேட்ச் திண்டுக்கல் இருபது ஓவர்களில் நூற்றி எண்பத்தி நான்கு எடுத்து ஆல் அவுட் ஆனது.

கடலூருக்கு இருபத்தி ஐந்து ஓவர்களில் நூற்றி எண்பத்தி ஐந்து எடுத்தால் வெற்றி.

சற்றே எளிய டார்கெட் தான். முதலில் எப்போதும் பிரவீன் இறங்கும் இடத்தில் முபாரக்கும் விஜய்யும் இறங்கினர்.

ஆரம்பம் முதலே முபாரக் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. வெறும் பதினெட்டு ஓவர்களில் ஜெயித்து விட்டனர் கடலூர் அணியினர். முபாரக் சதம் எடுத்தான்.

அடுத்ததுதா ஆட்டங்களில் விழுப்புரம் நன்றாக விளையாடி வந்தது.

காலிறுதிக்கு வந்த எட்டு அணிகளும் அதன் போட்டிகளும் கீழே உள்ளவாறு அமைந்தது.

நாகர்கோவில் (எ) சேலம்
கோயம்புத்தூர் (எ) சென்னை
விழுப்புரம் (எ) மதுரை
திருச்சி (எ) கடலூர்.

போட்டிகள் சூடு பிடித்தன.

இடை இடையே தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருவாரூர் என அணைத்து ஊர்களையும் சுற்றி பார்த்தனர் அனைவரும்.

முபாரக் ரியாஸ் இருவரும் பணத்தை நன்றாக செலவு செய்தனர்.

முபாரக் ரியாஸ் விஜி ரம்யா காயத்ரிக்கு எப்படி தொழுகை செய்வது என்று நாகூர் தர்காவில் சொல்லி கொடுத்தனர். வேளாங்கண்ணி மாதா கோவிலில் லெனினும் பூம்புகாரில் வரலாற்றை பற்றி ஹரியும் நன்றாக விளக்கினர்.

இப்படி ஒரு சுற்றுலா இதுவரை அவர்கள் போனதே இல்லை. இவ்வளவு ஆண்களுக்கு மத்தியில் தங்களை போக அனுமதித்த தங்களின் பெற்றோர்களையும் அவர்களே நம்பிக்கையாக அனுப்பும்படி நடந்துகொண்ட அந்த நண்பர்களையும் எண்ணி பெருமை பட்டனர்.

இதில் நர்கீசின் தோழி ராதா அந்த ஊரில் அனைத்து முக்கிய இடங்களையும் சுற்றி காட்டினாள்.

காலிறுதி போட்டிகளில் முறையே சேலம், கோவை, விழுப்புரம், கடலூர் வென்றது.

அரை இறுதியில் கடலூர் - விழுப்புரம் அணிகள் மோத இருந்தனர்.

ஆனால் விழுப்புரம் அணியினர் சற்றே தெம்பாக இருந்தனர். பிரவீன் இப்போது வரை விளையாடவில்லை. அவனது காயத்தை அதிகமாகிய பெருமை டேவிடையே சீரும் இல்லையா?

மறுநாள் போட்டி மைதானத்தில்.......

"பிரவீன், என்ன டா, இன்னிக்கும் நீ விளையாட மாட்டியா டா" என்றாள் விஜி.

"எங்க விஜி, இவன் தான் காயத்தை அதிகமாகி இருக்கானே" என்றான் விஜய்.

விஜி காயத்ரி சற்றே சோகமாக ப்ரவீனுடன் டாப்ஸை பார்த்துக்கொண்டிருந்தனர்.

விழுப்புரம் அணி கேப்டன் கணேஷ் டாசை வென்றான். கடலூரை பேட்டிங் செய்ய அழைத்தான் கணேஷ்.

முதலில் எப்போதும்போல விஜய்-முபாரக் ஜோடி இறங்கியது.

விஜியின் மேல் இருந்த கோபத்தையும் பிரவீன் மேல் இருந்த கோபடத்தையும் சரியாக காமித்தான் டேவிட். முதல் ஓவரின் மூன்றாவது பந்தை விஜய்யின் நெஞ்சில் நேராக தாக்கினான் டேவிட்.

நோ பாலாக ஆனாலும் விஜய்க்கு நல்ல அடி.

"என்ன பிரவீன், விஜய் அண்ணா வலி ல இருக்காரு டா, அவரு பாவம், இந்த டேவிட் வேணும்னே பண்ணறான் இல்ல?" என்றாள் விஜி.

"ம்ம்ம், அவன் நம்ம மேல இருக்கற கோவத்துல மத்த எல்லாரையும் டார்ச்சர் பண்ண போறான்." என்றான் பிரவீன்.

அடுத்த மூன்று பந்துகளுக்கு பிறகு அந்த ஓவரின் கடைசி பந்தை மீண்டும் புல் டாஸாக போட்டு விஜய்யின் வயிற்றில் அடித்தான்.

ஒரு ரன் லெக் பை முறையில் எடுத்தாலும் விஜய் வழியால் துடித்தான்.

"மச்சி, என்ன டா, முடியுமா" என்றான் முபாரக்.

"ம்ம்ம், முடியும் டா, பாத்துக்கலாம்" என்றான் விஜய்.

அடுத்த ஓவரில் இரண்டாவது பந்தை ஒரு ரன் எடுக்க முபாரக் தட்டி விட, அந்த அணியின் ராஜா பந்தை ரன் அவுட் ஆக்க வேகமாக எரிய அது மீண்டும் விஜய்யின் காலை பதம் பார்த்தது. கீழே விழுந்தான் விஜய். மீண்டும் எழுந்து எப்படியோ ரன்னை ஓடி எடுத்தான். இரண்டு பந்துகள் கூட நிற்க முடியவில்லை விஜய்யால்.

"டேய், அவன் நிக்க முடியாம தேன்ராறான் பாரு, போர் அடிக்குது, வேற ஆள இறங்க சொல்லு" என்று டேவிட் நக்கலாக சொன்னான்.

இரண்டு ஓவர்கள் முடிவில் வெறும் நான்கு ரன்களுடன் திணறியது கடலூர்.

"மச்சான், முடிலன்னா நீ போயிட்டு ரியாச அனுப்பு டா" என்றான் முபாரக்.

"இல்ல டா அது அசிங்கம்" என்றான் விஜய்.

"டேய், இந்த ஓவரும் டேவிட் போடறான் டா, நீ போ" என்றான் முபாரக்.

"இல்ல டா நான் பாக்கறேன்" என்றபடி விஜய் ஆட சென்றான்.

முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினான். டேவிட்டிடம் "அடிபட்டாலும் சிங்கம் சிங்கம் தான் டா" என்றான் விஜய்.

அடுத்த பந்தை மீண்டும் புல் டாஸாக போட்டு அவன் வயிற்றில் அடிக்க முயன்றான் டேவிட். ஆனால் அதை லாவகமாக தட்டி விட்டான் விஜய். ஒரு ரன் ஓடும்போது வேகமாக பந்தை பிடிக்க வருவதை போல விஜய் மேல் முரட்டுத்தனமாக மோதினான் டேவிட்.

அவ்வளவுதான், முபாரக் பொறுமையை இழந்தான். அம்பயரிடம் கம்ப்ளெயிண்ட் செய்தான். ஆனால் அம்பயரோ, விஜய்க்கு முடியவில்லை என்றால் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறுமாறு சொன்னார்.

விஜய் நடக்க முடியாமல் காலை நொண்டியவாறு கேலரியை நோக்கி நடக்க புதிய ஆட்டக்காரராக ரியாஸ் வந்தான்.

எதிர்பாராத விதமாக அடுத்த இரண்டாவது பந்திலேயே முபாரக் அவுட் ஆக ஆட்டம் தடுமாறியது. அடுத்து இறங்கினான் லெனின்.

மூன்று ஓவர் முடிவில் வெறும் 6 ரங்களுக்கு ஒரு விக்கெட்.

நாலாவது ஓவரில் கணேஷ் கடைசி பந்தில் லெனினையும் அவுட் ஆக்கினான்.

ஐந்தாவது ஓவரை மிகவும் சந்தோஷமாக வீச தயாரான டேவிட்டும் காத்திருந்தது அதிர்ச்சி.

பிரவீன் அடுத்த ஆட்டக்காரராக இறங்க, விழுப்புரம் அணி சற்று உதறலுக்கு உள்ளானது.

கேலரியில்,

"என்ன விஜய் அண்ணா, ரொம்ப வலிக்குதா" என்றாள் காயத்ரி.

"ஆமாம் மா, அவன் வேணும்னே ஒரு அன்பரொபெஷனல் ரூட் ல என்னை காயப்படுத்திட்டான். விடு, இப்போ பிரவீன் போய்ட்டான் இலை அவன் பாத்துக்குவான்" என்றான் விஜய்.

"அண்ணா அவனுக்கும் அடி பட்ருக்கே" என்றாள் விஜி.

"அவன் இப்போ என்ன பண்ணப்போறான் பாரு" என்றான் விஜய்.

டேவிட் வீசிய அந்த ஓவர் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸ்கள் விளாசினான் ரியாஸ்.

"பாத்தியா, ரியாஸ் வெளுக்கறான், இனிமே ஆட்டத்தை பாரு" என்றான் விஜய்.

அதன்பிறகு விக்கெட் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, இருபத்தி நான்கு ஓவர்களில் இருநூற்றி நாற்பது ரன்கள் கிழித்தனர் இருவரும்.

சதத்தைi இருவரும் கடந்து பயணித்தனர்.

கடைசி ஓவரை ப்ரவீனுக்கு வீச டேவிட் வந்தான். முதல் பந்தை புல் டாஸாக தொடைக்கு நேராக போட்ட டேவிடுக்கு அதே பந்தை ரிட்டர்ன் ஷாட் டேவிடை பார்த்து அடிக்க அது அவன் கையில் பட்டு தடுக்க முடியாமல் புயல் வேகத்தில் பவுண்டரி ஆனது, ஆனால் டேவிட்டின் வலது கை சுண்டு விரல் எலும்பு உடைந்து ப்ராக்ச்சர் ஆனது. வலியில் விழுந்து துடித்தான். ஒரே அடியில் விளையாட முடியாது என்று ஆட்டத்தில் இருந்து வெளியேறினான் டேவிட்.

"மச்சான், பந்து பொறுக்க கூட முடியாம புயல் கரைய கடக்குது டா" என்றான் பிரவீன்.

"ஏய்.....பொறுக்கி..." என்றான் டேவிட் கோபமாக.

"போ டா, பெரிய புடுங்கி இவரு, இனிமே நீ எங்ககூட விளையாட வரவே கூடாது" என்றான் பிரவீன்.

எளிதாக வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது கடலூர் அணி.

பகுதி 45 முடிந்தது.

--------------------------தொடரும்---------------------

எழுதியவர் : ஜெயராமன் (18-Sep-17, 9:09 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 273

மேலே