நான் உன் அடிமை

அழகிய எனதன்புக் காதலனே.....

முகத்தழகினை ரசிக்கவே
முழுமையாய் முனைந்திருந்தேன்.

ஏனோ மனம், அகத்தின் கவர்ச்சிப்
பிரதேசங்களிலேயே அடங்கி அலைகிறது.

சிலநேரங்களில் வட்ட நிலவின்
நிதர்சன காந்த அழகினைவிடவும்,

வானத்து வண்ணஜாலங்களே
வட்டமடித்துக் கொண்டாடிக் கிடக்கின்றன.

உன் அழகிய இந்த மௌனம்
குழறுபடியோ என்றே பதைக்கிறது.

உண்மைகள், இனிக்கவும் செய்யும்,
மலைக்கவும் கூடும். மறக்கவும் இயலாதது.

என் வார்த்தைகள் யாவும் சந்தித்தது
ஏற்றுக்கொள்ளமுடியாத் தோல்வியையே.

ஆயினும் உன் அகம் பார்த்தே நிற்கும்
நிலையில் நான் ஒரு அடிமைதான்.

கூடவே ஓடி வந்து என் குழல் இழுத்து,
மனம் நிறைத்து, வெற்றிதான் உனக்கு.



எழுதியவர் : thee (25-Jul-11, 11:15 am)
பார்வை : 329

மேலே