உனை தொடும் அலைகள்
உனை பற்றிய நாள்முதல்
பற்றின்றியிருந்த நானும்
மாறிப்போனேன்..
என்னுள் வாழ்வின் எதார்த்தை
புரியவைத்தவன் நீ
இனி பிரிவற்ற நிலையை
ஏங்கியே தவிக்கும் என்மனம்.
கோபமாய் பேசிய சிலவினாடிகளில்
தன்மையாகவும் பேச உன்னால்தான் முடியும்.
சூழ்நிலைக்கேற்ப சரிசெய்துக்கொள்ளும் உந்தன் திறனழகு.
முகபாராது புரிந்துக்கொள்ளும் உந்தன் நேசமழகு.
வித்தியாசமாய் தினம் தினம் எனக்குள் பரிணமிக்கிறாய்..
இருமனம் ஒன்றிணையும் எப்படியென
சிலநேரம் நினைத்ததுண்டு.
இப்போது புரிகிறது.
கடலில் பெருமளவு நீர் இருந்தும்
சிறிது சிறிதாய் தான் அலை கரையை தொடும்.
அதுபோல் உந்தன் நற்குணங்களின் குவியலியிருந்து சிறிது சிறிதாய் இதுவும்..
- வைஷ்ணவதேவி