செப்டம்பர் 22 ஒரு கேள்வி

செப்டம்பர் 22: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு என நாளேடுகளில் நாம் படித்த நாள், ஜெயலிதா உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக தொலைக்காட்சி செய்திகள் கேட்ட நாள். அவரின் தொண்டர்களை பெரு கவலையில் ஆழ்த்திய நாள். என்ன என எல்லாராலும் கூர்ந்து பார்க்கப்பட்ட செய்தி அது . வருடம் ஓன்று கடந்திருக்க்கிறது .

காய்ச்சல் கொஞ்சம் நீர் சத்து குறைவு தான் மருத்துவமனைக்கு கொண்டு போக காரணம் என்றார்கள்.

தொண்டர்கள் க்ரீன்வயஸ் சாலையில் குவிந்து போக்குவரத்து மாற்றப்பட்டு மக்கள் கேள்விகளோடு எழுந்த நேரத்தில் அவர் சாதாரண உணவுகளை சாப்பிடுவதாகவும் விரைவில் அவரது பணிகளை தொடர்வார் என்றும் அப்போலோ நிர்வாகம் கருத்தும் வெளியிட்டது.

பின்பு லண்டன் மருத்துவர்கள் , டெல்லி மருத்துவர்கள் வந்தார்கள் என்று மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டினார்.

அதன் பிறகு மருத்துவமனையில் இருந்தே அலுவல் செய்வதாக சொல்லிக் கூட காதில் பூ சுற்றினார்கல். முதலில் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்புறம் மெல்ல மெல்ல சில விஷயங்கள் சொல்லி சொல்லி விரைவில் வீடு திரும்புவார் என்று அவரை தனி வார்டுக்கு மாற்றியதாக தகவல் தெரிவித்தனர்.

அப்புறம் டிசம்பர் ஐந்து அன்று அவர் மாரடைப்பால் இறந்ததாக நள்ளிரவில் பல ஏற்பாடுகளுக்குப் பின் அந்த தகவல் வெளியானது. இவை எல்லாம் நமக்கு தெரிந்தது தானே நான் ஏன் சொல்கிறேன் என நினைக்கிறீர்களா . உங்களுக்கு சற்று நியாபகப் படுத்த தான் .

ஜெயலலிதா அங்கு இருந்த போது எந்த புகைப்படமும் வெளியாகவில்லை என அன்று கேள்வி கேட்டனர்.. இன்று வரை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காட்சிகளும் ஏன் வெளிவரவில்லை என அந்த நாட்களில் எதனை கேள்விகள் எழுப்பப்பட்டன . அவரை சந்திக்க சென்றவர்கள் அவர்கள் பிரதிநிதிகலை சந்தித்து விட்டு அவர் நன்றாக இருப்பதாக கூறியதற்கு மக்கல் மத்தியில் வந்த அதிருப்திகள் எத்தனை ..

அவர் ஆசுபத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் இறந்ததாக வந்த தகவல்கள் எத்தனை. அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது அவர் இறந்து தான் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வெளியிட்ட அப்போல்லோ நர்ஸு எங்கே போனார். எதனை எத்தனை WhatsApp மெசேஜ் எல்லாம் அப்போது உலா வந்தன . எத்தனை கேள்விகள் மக்கள் மனதிற்குள்.

ஜெயலிலிதா சமாதி வரை அவரை சுற்றி சுற்றி நின்று எத்தனயோ உண்மைகளை மறைத்த சசி இன்று வழக்கில் கைதாகி சிறையில் தூங்கி கொண்டிருக்கிறார். கேள்விகள் கேட்ட நாமும் தூங்கிவிட்டோம்.

இது நமக்கு வழக்கம் தானே .ஒரு செய்தியை கேட்டதும் உடனே உணர்ச்சி வந்து நாலு கேள்விகள் கேட்போம் . ஆனால் அடுத்த சூடான செய்தி கண்டதும் முந்தய செய்தியை மறக்கச் செய்துவிடும் ஊடகங்களும் மந்த புத்தி கொண்ட நம் மூளைகளும்.

தமிழகத்தை ஆட்டிப்படைக்கவும் பல தமிழ் மக்களின் மனங்களில் வாழ்ந்த ஒரு தலைவரின் இறுதி கதையின் முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே கிடக்கிறது. இதை என்னவென்று சொல்வது .ஒரு முதல்வருக்கே இந்த கதி .
நீதி இங்கு கேள்விக்குறியே .

முதல்வருக்கே இந்த கதி என்றால் ஒரு சாமானிய கொலையில் நீதி கிடைத்திட குற்றவாளிகல் கண்டுபிடித்திட காவல்துறை எவ்வளவு வீரியமாக செயல்படும் என நினைத்து பார்த்து கொள்ளுங்கள். காவல் துறை தான் தூங்குகிறதோ. காவல் துறை தன கடமையை செய்கிறது போல.

மறத்தல் நல்ல குணமே . எல்லாவற்றையும் எளிதாக மறந்து விடுகிறோம் இது போல. அடுத்த விஷயத்துக்குள் நுழைந்து விடுகிறோம்.

சில கேள்விகள் விடை கிடைக்காமலே சாய்ந்து விடுகிறது பின் காணாமலும் பூய் விடுகிறது . இந்த கேள்வியும் தான். தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்தது செப்டம்பர் 22 ஆ அல்லது டிசம்பர் 5 ஆ .
அவரது மரணம் இயற்கை மரணமா அல்லது அவரது மரண நாள் சில பேரால் எழுதப்பட்டதா .
எழுப்பப்பட்ட கேள்விகள் பதிலளிக்கப்படாமல் ஓய்ந்து போனது ஏன். எந்த விசாரணையும் இன்னும் அமைக்கப்படாதது ஏன் ?

இந்த நாள் எழுப்பிய இந்த சின்ன வினாக்குறியோடு உங்களிடம் நான்

எழுதியவர் : யாழினி வளன் (22-Sep-17, 3:09 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 62

மேலே