ஒரு முத்தத்தின் குறிப்பேடு

அந்தக் காகிதங்களை
செல்லரித்திருக்கவில்லை
ஏதோவொரு ஆழ்ந்த தேடல்
களஞ்சிய அறைக்குள்ளிருந்த
பெட்டிக்குள் விழுந்து கிடக்கிறேன்

எதிர்பாரமல் என்னை
வந்தடைந்த குரலற்ற குரல்
அந்த காகிதத்தின் படபடப்பு
அத்தனையும் பசுமையான
பேரன்பின் பிதற்றல்கள்
பொதிந்த கையெழுத்து
அச்சுக்கள்

காலத்தின் நரைமுடிகளுக்கு
சாயமிடும் புன்னகைகள்
சுழியோடு சுழன்ற போது
பதப்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியானது உள்ளம்

இரைமீட்டிய தொலைதல்
நேரங்களை விழுங்கிக்கொண்ட போது
முகாரிகள் இடைவெளி
எடுத்துக் கொண்டன
முத்தங்களுடன்
விடைபெறுகின்றேன்

-மின்மினி

எழுதியவர் : (22-Sep-17, 9:41 pm)
பார்வை : 73

மேலே