வலசையின் உதிரிகள்

நிசப்தத்தின் எதிரொலிகளை
மௌனம் செவ்வியெடுத்த போது காற்று அதிர்ந்து கொண்டது
நிஷ்டையின் மூழ்கிய திணறலை விடுவிக்கும் போது சுவாசம் மட்டும் அங்கு எஞ்சியிருந்தது

அங்குமிங்கும்
எழுந்தமானமாக வரைந்த
இரேகைகளுக்குள்
நிரலிட்ட நரம்புகளில் அசையும் உதிரிகளை அள்ளி
இறக்கை செய்கிறேன்
வலசையைப் போல
மீப்பெரும் அமைதிக்குள்
தலை அமிழ்ந்தப் பற்றிய
அந்த நீண்ட விரல்களொத்த புல்லாங்குழல்களுக்குள்
நெகிழ்ந்து இசைக்கிறேன்

சரணாலயத்தை சுமக்கும்
பேரொளித் துகள்கள் சிதறியிருந்த அடிவாரத்தில் தான் அன்று செவிகளைக் களைந்திருந்தேன்
கீச்சொலிகளால் அலங்கரித்துக்கிடந்த அடவியில் நானும் மீச்சிறு
குரலாய் ஒலித்துக்கொண்டே
மறுநாள் பருத்தியின் விதைக்குள்
ஒடுங்கிக்கொண்டேன்

-மின்மினி -

எழுதியவர் : (22-Sep-17, 9:49 pm)
பார்வை : 55

மேலே