தங்கஞ் செய் சித்தர்

கடவுள் வாழ்த்து
---------------------
(கலி விருத்தம்)
கைலை வாழ்சிவத் தின்பதம் வீழ்ந்தனம்
ஐங்க ரன்கும ரன்பதம் வீழ்ந்தனம்
வாணி யின்யிரு தாள்தொழ வீழ்ந்தனம்
வானேத் தும்அகத் யர்பதம் ஏத்துமே


வெண்பா
அகத்தீசன் ஒப்பாம் ஜெகத்தீச னுக்கு
பகரமாய் விஞ்ஞானம் பாரில் --- அகலாத்
துறையும் இருபத்தைந் தில்கற்பம் தங்கம்
உறுதியாய்ச் செய்முறைக் கேள்

விலைத்தாழ் உலோகம் கலைக்கவரால் தங்கம்
நிலையற்ற தேகம் நிலைக்க --- தலைவிழா
தாயிரமாண் டும்தேகம் மாயா திருக்கவும்
காயகற்பம் செய்துண்டி டும்

கல்விக்க ரையிலக் கற்பவை நாள்சிலவாம்
வள்ளுவரும் சித்தென விள்ளுவர் --- கல்ற்பங்கள்
முந்நூறும் ஐந்நூறுப் பஞ்சரெத்னம் வைத்தியம்
எண்ணூறும் வள்ளுவன்செய் நூல்

உடல்கெட்டுச் சாகா உடலிருக்கக் கற்பம்
உடல்காக்கும் கற்பதங் கஞ்செய் --- புடபற்பம்
கற்பம் எளிதல்ல கற்பவுப்பைச் சித்தரும்
அர்ச்சித்தெ டுப்பர் துணிந்து

உலகின்மூ லக்கூறு மொத்தம் அலகில்
பலவாக முந்நூற்றுப் பத்தும் --- வலமுடன்
நான்கும் இணைதலில் காணும் சிவன்மாலும்
நான்முகன் ஆவதுண்மை யாம்

ஒன்பதாம்ரெத் னம்உலோகம் ஒன்பதுப் பாஷாணம்
நன்றாய் விளைந்தப் பறங்கியர் --- கண்ட
அறுபத்தி நால்பாஷா ணங்கள் உருவம்
இருபத்தைந் துப்புளியுப் பு

நல்லுபர சங்களிரு நூற்பதினார் கல்லுப்பும்
நல்பூநீர் முப்புவின் சுண்ணமும் --- சொல்லுமே
பட்டியலில் கூறினார்நம் பத்தெட்டுச் சித்துக்கள்
விட்டதில்லைப் பட்டியலில் ஒன்று

பல்லா யிரமாண்டாய் நல்சித்தர் சொன்னாரே
பொல்லாப் பறங்கியர்பின் சொல்லியது --- துல்லியமும்
இல்லை கிளார்க்ஸ்டேபுள் பூர்த்தியும் இல்லையாம்
நல்சித்தர் வாக்கறிகி லர்
--------------------------------------------------------------------( இன்னும் வரும்)
---ராஜ பழம் நீ (24-Sep-2017)

எழுதியவர் : பழனி ராஜன் (24-Sep-17, 11:18 am)
பார்வை : 85

மேலே