புரட்சியின் பூக்கள்
ஆற்றோரம் கரை இருக்கு,ஆங்காங்கே மணல் கிடக்கு,
அதை அல்ல சில கரம் இருக்கு,
இதை தடுக்க யாருக்கு தைரியம் இருக்கு!
அத்தி பூத்த ஆறு குளமும், ஆகாயம் பார்த்து காஞ்சி கிடக்கு,
வரிசை கட்டி பரிசல் பூட்டியதை நம் தலைமுறை பார்த்திருக்கு
என் பிள்ளை குடிப்பதற்கு தண்ணி எங்க இங்கிருக்கு!
தரணியாண்ட தமிழன் என்ற திமிறிருக்க
திரும்பிய இடம் எல்லாம் போராட்டம் நடக்க
கண்டுகொள்ளவில்லை மந்திரி
இதை திசை திருப்ப வந்தவள் தான்
ஜிமிக்கி கம்மல் சுந்தரி!
குடம் நிறைய தண்ணீரில்லை குவளையில் குடிக்க,
அதை குடுக்க அவருக்கு குணமில்லை,
இது தான் நம் கவலை!
வந்தாரை வாழ வைத்தோம் உடன் சொந்தோரை சோத்துக்கு
தொங்க விட்டோம்!
விவசாயம் செத்துப்போச்சி, போராட்டமே தினசரி வேலையாச்சு!
ஆட்சியும் அரசும் கோழையாச்சு,
அடிதடி நடந்து ஆட்சி கட்டிலுக்கு போட்டியாச்சி !
விவசாய நிலமெல்லாம் வேலி போட்டாச்சு,
கோட்டை வரை போராட்டம் கூட்டியச்சி,
மேடைக்கு மேடை விவசாயி பற்றி எதுக்கு வெட்டி பேச்சி!
பள்ளி கல்லூரி பாடம் இல்லை
தினம் தினம் தெருவில் தான் பாடசாலை!
கரும்பலகை பார்த்து நாட்களாச்சி
போராட ஒரு பலகை தூக்கியாச்சி!
தமிழ்நாடு இழந்தது தன்மானம்
இங்கு வாழ்வது அவமானம்!
காற்றில் பறக்குது உழவனின் கோவணம்
ஆட்சியோ காக்கிறது மௌனம்!
புரட்சியின் தோட்டத்தில் தான்
விடியலின் பூக்கள் மலரும்!
சந்தானபாரதி.ப
9578277832

