மொத்தமா மிச்சமா
மயில் பீலிக்கீற்றுகளையும்
பட்டாம்பூச்சி றெக்கைகளையும்
மெஹந்திக்குழாய் பிதுக்கல்
மிச்சங்களையம்
இன்னும்
மடியில் கட்டிக்கொண்டிருக்கிறேன்.
முத்துக்களை துப்பிய பின்
எஞ்சிய சிப்பிக்கூடுகளையும்
கிளிஞ்சல் ஓடுகளையும்
வைத்துக்கொண்டு
சொட்டங்கல் ஆடும் அந்த
கடற்சிறுமியைப்போல.
ஓ
என பேரிரைச்சல் இடும்
கடலுக்கு கூட
துடிப்புகள் அடங்காத
இதயத்தின்
ஆரிக்கிள் வெண்டிரிக்கிள்களின்
ரகசிய அறைகள் உண்டு போலும்.
வாழ்க்கையில்
காதல் என்பது
மொத்தமா? மிச்சமா?
===============================