தனிமையின் உயிர் தோழன்

தனிமை என் தவறுகளை திருத்தியது
என் கவலைகளை துரத்தியது
தூரத்தில் நின்ற என் கனவுகளை பற்றி கற்றுக்கொடுத்தது!

எத்தனையோ இரவுகளில் என் கண்ணீருக்கு காரணமானது!
சிலநேரங்களில் என் மனம் கனம் ஆனது !

கவலைக்கு காரணம் தனிமை என்றாள்
என் வண்ணக்கனவுகளுக்கும் காரணம் தனிமைதான் !

சுற்றியும் உறவுகள் இருந்தும் உணர்ந்திருக்கிறேன்
தனிமையில் பற்றி எறிவது போல !

உறவுகள் போல சில,உரிமைகள் போல சில,
உண்மைகள் போல சில தந்தது தனிமைதான்!

தனி மையின் பேனாவில் சிதறியது சில கவிதைகளாக !

தேடல் என்னுள் முடியாத தொடர்கதை?
தனிமையின் காரணங்களை !

நான்மொழிந்த வார்த்தைகள் எல்லாம்
என் தனிமை கற்று தந்த பாடம்!

உணர்வுகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள
உயிர் நண்பனாக ஒட்டிக்கொண்டது தனிமைதான் !



தனிமைக்கு நான் துணையாக காரணம்
ஒத்துவராத உறவுகள்
அவர்களுடன் ஒட்டிக்கொள்ளாத உணர்வுகள்!

உரிமைகேட்டேன் உதாசீனம் படுத்தினர்
அன்புக்கேட்டேன் அதிகம் வேண்டாம் என்றனர்!

எப்போதும் இணைந்திருக்க ஒரு கரங்கள் கேட்டேன்
கேட்டது எப்போதும் கிடைக்க வில்லை.
தனிமையில் காத்திருக்கிறேன் துணைக்காக!

எழுதியவர் : சந்தானபாரதி.ப 9578277832 (26-Sep-17, 1:54 pm)
பார்வை : 975

மேலே