தங்கை
என் அன்னைக்கு அவள் இரண்டாம் வரம்
எனக்குள் அவள் மூன்றாவது கரம்
இருவர் ரத்தமும் ஒரு ரத்தம் தான்
இறைவன் படைப்பில் இதும் ஒரு சித்தம் தான்
மெல்ல மெல்ல சண்டை போட்டு
உள்ளம் உள்ளே கொண்டை போட்டவள்
தலைவனுக்கு அன்பு செல்ல பிள்ளை
தலைமகன் எனக்கு அன்பு தொல்லை செய்யும் பிள்ளை
கடை குட்டி என அவளுக்காக மடைகட்டி
என் அன்னை எல்லா அன்பையும் அவளுக்கு பாய்ச்சுகிறாள்
கட கடவென தொடரும் தொடர் வண்டி வாழ்க்கையில்
மட மடவென வளரும் இளம் மலர் அவள்
அடிக்கடி அவளுடன் சண்டை போட அன்னை திட்டி
தாயென அவள் பெரும் பிள்ளைக்கு தாய் மாமனென
அவள் அருகில் நான் தான் இருக்க வேண்டுமாம் .
முடிவில் அவள் பெரும் மகனுக்கு
என் மகளுடன் முடி போட்டு .
முடிவில்லா சொந்தமென தொடர வேண்டுமாம்!