சில சமயங்களில் மூச்சடைத்துப்போகிறேன்

ஏன்டி திருடி உன் கையை கன்னம் தாங்கச் செய்கிறாய்...

உனக்கு தெரியாதுடி.......?
அன்று, உன்னை முன் முதலாய் கண்ட போது வாயடைத்துப் போனேன் என்று
இப்படி ஒரு அழகியா என்று.....

இன்று, உன் அருகில் வருகின்ற போதெல்லாம் மூச்சடைத்துப் போகிறேன்......
என் மூச்சுக் காற்றால் தூசுகள் கூட
உன் கண்களில் வீழ்ந்து விடக்கூடாது என்று........

இப்படியெல்லாம் நினைக்கும் எனக்கு
தெரியாதா உன் கைகள் கன்னம் தாங்குவது சோகத்தில் என்று.....

எழுதியவர் : ஜதுஷினி (28-Sep-17, 9:08 pm)
பார்வை : 133

மேலே