நுட்பத் தமிழ்

புலனங்கள் பல
என் மொபைலில்
இருந்தும் அகம்
மகிழ்வது சிலவற்றில்தான்...

தூக்கம் வரா இரவுகள்
வலையொளியில்
மழைக்கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சலாடியது
கமல் ஸ்ரீதேவியோடும்...
விழியே விழியே
உனக்கென்ன வேலை
எம்ஜிஆர் ஜெயாவோடும்...
அறிஞர் அண்ணாவின்
அழகு தமிழோடும்...
இன்பமாய்க் கழியும்...

வட இந்திய நடிகைகள்
படவரிகளில் வந்து
போவதுண்டு அவர்களின்
முகவரிகள் தற்காலிகமாய்
வெளிநாட்டு அழகு
கடற்கரைகளுக்கு
இடம்பெயரும் பொழுது...

அளாவி பயன்பாடு பற்றி
கேள்வி ஞானம் உண்டு
எனினும் யாரிடமும்
அளாவியதில்லை இதுவரை...

வெளிநாடு நண்பர்கள்
அவ்வப்போது தொடர்பில்
வந்து போவதுண்டு
பற்றியம் துணைகொண்டு..

ரஜினி கமல் முதல்
மோடி ராகுல் வரை
கீச்சக பதிவுகளின்
பரபரப்புகளுக்கு
பல நேரங்களில் என்
கண்களைத் தருவதுண்டு...

தொலைவரி வழி செய்தி
அனுப்பும் முறை
தொலைந்து போனாலும்
கடந்த வளர் காலங்களில்
வாழ்வில் சிலமுறை
வாழ்வை புரட்டிப்போட்ட
தொலைவரி ஞாபகங்கள்
அவ்வப்போது தீமூட்டும்...

வெளிநாட்டிலிருந்து
காயலையால் தாய்முகம்
பார்த்துப் பேசியதிலுள்ள சுகம்
இந்தியாவிலிருந்து
வெளிநாடு காயலை
நேர்முகங்களில் இருப்பதில்லை...

மொபைல்களுக்குள் ஊடல்
எப்போதும் இருப்பதில்லை
ஊடலை அருகலை
பகிரலை இருப்பதால்...
ஆலலையின் தயவு
இயங்கலைக்கு எப்போதும்
தேவையில்லை திறன்பேசியின்
செறிவட்டையில்
இணையம் இருப்பதால்...

தம்படமும் தடங்காட்டியும்
வருடியும் வருடுகிறது
மனதை எப்போதும்...
முடக்கலை முடக்கவில்லை
கைபேசியை... மின்னூக்கி
எனும் கிரியாஊக்கியால்...

வாழ்க தமிழ்...
வளர்க நுட்பவியல்
கலைச்சொற்கள்...
😀👍🙋🏻‍♂🚶🏻

குறிப்பு:
----------------
மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp - புலனம்
2. youtube - வலையொளி
3. Instagram - படவரி
4. WeChat - அளாவி
5.Messanger - பற்றியம்
6.Twtter - கீச்சகம்
7.Telegram - தொலைவரி
8. skype - காயலை
9.Bluetooth - ஊடலை
10.WiFi - அருகலை
11.Hotspot - பகிரலை
12.Broadband - ஆலலை
13.Online - இயங்கலை
14.Offline - முடக்கலை
15.Thumbdrive - விரலி
16.Hard disk - வன்தட்டு
17.GPS - தடங்காட்டி
18.cctv - மறைகாணி
19.OCR - எழுத்துணரி
20 LED - ஒளிர்விமுனை
21.3D - முத்திரட்சி
22.2D - இருதிரட்சி
23.Projector - ஒளிவீச்சி
24.printer - அச்சுப்பொறி
25.scanner - வருடி
26.smart phone - திறன்பேசி
27.Simcard - செறிவட்டை
28.Charger - மின்னூக்கி
29.Digital - எண்மின்
30.Cyber - மின்வெளி
31.Router - திசைவி
32.Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு
33 Thumbnail சிறுபடம்
34.Meme - போன்மி
35.Print Screen - திரைப்பிடிப்பு
36.Inkjet - மைவீச்சு
37.Laser - சீரொளி

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (28-Sep-17, 9:30 pm)
பார்வை : 280

மேலே