இது தான் என்னில் வைத்த பாசமா ..?
அன்பே உன் முகவரி
தொலைத்து விட்டேன்..!
உன் முகவரி தொலைந்ததினால்
முற்றுப் பெற்று விட்டு விடவில்லை
உன் நினைவுகள் .. .!!
நீயோ உன் மௌனங்களை
வீசி செல்கிறாய் ..!
உன்னை பார்க்காத
போது என் சிந்தனைகள்
சிதைந்து போகின்றது ...
இதை நீ அறிவாயா ..?
அழகாய் பூத்து குலுங்கிய
நம் வாழ்க்கை இன்று
அனாதை ஆனதும் ஏன்..?
உன் சிரிப்பினில்
என் வாழ்கையை
அழகாய் பூர்த்து குலுங்கும்
பூஞ்சோலையாய் ஆக்கினாய் ..
ஆனால் இன்று அதில் பூக்கள்
உதிர்வதை பார்க்க மறுக்கின்றாய் .. !
இது தான் என்னில் வைத்த பாசமா ..?