அம்மா

இறுக்கிய துன்பங்களால்
சறுக்கியது நம்பிக்கை ..!
தீராத துன்பம்
எனக்கு மட்டுமே..
வலியை மறக்கும்
வழியை தேடினேன்
அம்மா எங்கே நீ...!
அதிர்ஷ்டம் இருந்தால்
ஆண்டியும் அரசன்தான்..!
நீ தானே என் அதிர்ஷ்டம் எங்கே சென்றாய்...
நீ இல்லாமல் நான்
ஆண்டியாய் ஆனேன்..!
பாசம் தேடும் பாவியானேன்...!