என்ன சொல்ல.....!

என்ன சொல்ல -என்
உயிருக்குள் உறங்கும்
உன்னை என்ன சொல்ல.....!
நீ எட்டி நின்று சிரித்தாய் -என்
மனதுக்குள் -ஒரு
ஒரு மொட்டு மலரானது
என் அருகால் -உன்
வாசம் பட கடந்துபோனாய்
இறக்கையில்லாமல் பறந்தேன்....!
உன் கூந்தல் கண்டேன் -என்
பார்வை ஒருகணம்
தடுமாறிப்போனது ...!
வெகுதூரத்தில் நான்
உன் நிணைவுகளை அசைபோட -நீ
காற்றில் என்னை மிதக்கவைகின்றாய்...!
உன்னை என்ன சொல்வேன் -நான்
என் மனதுக்குள் -உறங்கும்
உன்னை என்ன சொல்ல.....!