கிறுக்கல்கள்
கண் விழி ஓரம்
கண்ணீர் துளி
வழிந்து ஓடுகிறது
பாதை இல்லாமல்
---------------------------------------------
புன்னகை தேய்பிறை
நிலவை போல
மறைந்து கொண்டே செல்கிறது
சோகத்தின் முன்னால்
---------------------------------------------
தொடர் தோல்வி
முயற்சிகளை முடக்கி விட்டது
முதல் வெற்றி பெறாமலே
---------------------------------------------
உன் முதிர்ச்சி பலத்தின் முன்னால்
தோல்வியே நீ
முயற்சியின் பலவீனமா
--------------------------------------------
வெற்றிக்கள் பிறக்கின்றன
தோல்விகளின் இறப்பிற்கு பின்
--------------------------------------------
தோல்விகள் உனக்கு மட்டுமல்ல
உலகிற்கே சொந்தம்
--------------------------------------------