சாலை மறியல்கள்
புதிதாக சென்னையில் மழை வெள்ளங்கள் சாலை மறியல் செய்கின்றனர்.
எனக்காக கட்டபட்ட ஏரிகளையும் குளங்கலையும் மீட்டு தாருங்கள் என்று.
அவை வீடு வீடாக சென்று மனிதர்களிடம் கூறும் அவலம் கண்டீர்களா தோழர்களே !
கட்டுப்படுத்த நினைத்தாலும் முட்டி கசியுது மழை நீர் வீடுகளுக்குள்
வயிறு முட்ட நீரை குடித்ததில் மூச்சு விட திணறும் வீடுகள்
வாகனங்கள் நான்கு கால்களில் நீச்சலிட்டு மனிதனை கரை கடத்தும் தெப்பங்களோ !
பெருக்கெடுத்து ஓடுகிறது வெள்ளம் ஏழைகளின் கண்களில் தப்பிக்க வழி தெரியாமல்
சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது நான் சொன்னது கூவம் சாலை வீடுகளில்! தோழர்களே !!
பாதிப்புகள் பல இருந்தாலும் மகிழ்ச்சி மழலைக்கு நாளை பள்ளி விடுமுறை என்று
குழைந்தகைளின் அறியாமை என்ன சொல்ல ..............
தரிசக்கப்பட்ட அணைகளால் பரிசாக கிடைத்ததுதான் சாலை நீர் தேக்க திட்டம்
ஒரு நாள் சென்னையும் மனித நடமாட்டம் இல்லாத மாயணமாகவும்
கூடிய விரைவில் மழை வாழ் நகரமாகவும் மாறப்போகிறது!!!
அழிந்த சான்றாக தலைநகரமான சென்னையை வரும் தலைமுறைகள் காணப்போகின்றன!
இது போன்ற அலட்சியங்கள் அதிகாரிகளிடம் நீடித்தால் ..............................