என் கனவுகள்

உன் மடியில்
தலை சாய வேண்டும்..
உன் விரல்
என் தலை கோத வேண்டும்..

கன்னத்தில் இதமான
இதழ் முத்தம் நீ தர வேண்டும்..
கண்ணோடு கண் வைத்து கண்
அயர வேண்டும்..

சின்ன சின்ன சில்மிஷங்கள்
நீ செய்ய வேண்டும்..
சின்ன விழி கோபம் நான்
கொள்ள வேண்டும்..

வயதான போதிலும்
உன் அன்பு எனக்கு வேண்டும்..

கண் மூடும் காலம் வரை
உன் காதல் எனக்கு வேண்டும்..
கண் மூடிய போதிலும் இம்மண்ணில்
நம் காதல் வாழ வேண்டும்..!

இன்னும் பல கனவுகளுடன்..

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (30-Sep-17, 7:53 am)
Tanglish : en kanavugal
பார்வை : 211

மேலே