எனக்கு ஒரு தோழி

என் வாழ்க்கை
பாதை முழுதும்
தோல்வி எனும்
வலை விரித்து
காத்திருக்கிறது
பயணம்...
பாவம்
அதற்க்கு தெரியவில்லை
போலும்
எனக்கு ஒரு தோழி
இருப்பது...
யாரேனும் கண்டால்
சொல்லுங்கள்
நான்
துவண்டாலும்
அவள்
தோள் கொடுப்பவள்
என்று...