கவிஞனின் கல்லறை

கவிஞனின் கல்லறை
இங்கே
அவனில்லை
அவன் ஆத்மாவை
சிக்கவைத்திருந்த
பொறி உடலே
நித்திரையில் . . . . .
இங்கே
சுண்ணம் பூசாதீர்!
அவன் ஆத்மா
தன் கவிதைகளை
சுவரெல்லாம்
சித்தரித்துக் கொண்டுதான்
இருக்கிறது . . .
இங்கே
ஒட்டடை நீக்காதீர்
அவன் கவிதை
வலைதனில்
சிக்குண்ட சிலந்திகள்
சுயமாய் சிந்தித்து
வெளிவரட்டும் . . . .
இங்கே
விளக்கேற்றாதீர்
இன்னும் எத்தனையோ
இதயங்களின்
மன இருளை அரிக்கின்ற
பகலவனாய் அவன்
கவிதைகள் . . .
சு.உமாதேவி