கல் தேயும் காதல் தேயாது

கல்லாக இருந்தது
மண்ணாகிப் போனது
மண்ணாகிப் போனதும்
கல்லென்ற பெயர்
காணாமல் போனது
கல்லாக இருந்தது
கடவுளாகிப் போனது
கடவுளாகிப் போனதும்
கல்லென்ற பெயர்
காணாமல் போனது
மெய்யாக இருந்தது
பொய்யாகிப் போனது
பொய்யாகிப் போனதும்
மெய்யென்ற பெயர்
காணாமல் போனது
காதலாக இருந்தது
கல்யாணம்வரை போனது கல்யாணமாகிப் போனாலும்
காதலென்ற பெயர்
காணாமல் போகாது
•••••••
ஆபிரகாம்-
வேளாங்கண்ணி