காணாப் போன மும்மாரி
(வெண்பா)
வேதம் தழைத்திட மாதமோர் வேதமாரி
வேந்தரின் கொற்றத்திர்க் கோர்மாரி --- மீதமாய்
கற்புடை மங்கையர் பொற்புடைக் கோர்மழையாய்
நெற்றுமாரி மாதமூன் று
வேதமாரி சண்டாளர் பேதமையில் போனது
வேந்தரின்றி நீதிமழைப் போனது --- நீதமான
கற்பு சுயமாக அற்பவுலா வந்திடக்
கற்புமழை வீணாயிற் று
--- ராஜ பழம் நீ (01-Oct-2017)
நெற்றுமே = நெருக்கிடுமே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
