காதலின்

காதலின் கண்ணாமுச்சியில் கண் கட்டாமலே
ஆட்டத்தில் நீயும் நானும்
காதலின் இசைமழையில் ஸ்வரம் மீட்டாமலே
சங்கீதமாய் நீயும் நானும்

காதலின் கேள்வியில் பதில் தெரியாமலே
புதிராய் நீயும் நானும்
காதலின் வேள்வியில் நெருப்பு இல்லாமலே
புகையாய் நீயும் நானும்

காதலின் ஆற்றில் தாகம் இல்லாத
மீன்கலாய் நீயும் நானும்
காதலின் சேற்றில் சுத்தம் தேடாத
புழுதிநீராய் நீயும் நானும்

காதலின் சுவற்றில் வண்ணங்கள் பூசாமலே
ஓவியமாய் நீயும் நானும்
காதலின் கையிற்றில் இடைவெளிகள் இல்லாமலே
பிணைந்த நாராய் நீயும் நானும்

காதலின் தேரில் சக்கரங்கள் பூட்டாமலே
உலாப்போகும் நீயும் நானும்
காதலின் வானில் சிறகுகள் இல்லாமலே
நீலாப்போகும் நீயும் நானும்

காதலின் கெஞ்சலில் அஞ்சல் அனுப்பாமலே
கொஞ்சல்களாய் நீயும் நானும்
காதலின் கோபத்தில் பகுத்தறிவு இல்லாத
மிஞ்சல்களாய் நீயும் நானும்
காதலின் கடலில் கரை தேடாமலே
கிளிஞ்சல்களாய் நீயும் நானும்




காதலின் நிசப்தத்தில் வார்த்தைகளில் பரிமாறாமலே
மவுனமாய் நீயும் நானும்
காதலின் கணத்தில் உதடுகளுக்கு வேலையில்லாமலே
விழிகளோடு வாழும் நீயும் நானும்

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (2-Oct-17, 12:17 am)
Tanglish : kathalin
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே