அன்னைக்காக ஓரிரு வரிகள்
ஒரு ஜீவனுக்குள் இரு இதயத்துடிப்பின் ஓசை ..
தாயே நான் உன் கருவறையில் இருந்த போது....
ஆனால் இன்றோ உன் அருகாமையினால் என் இதய ஓசையில் ஓர் சலனம்...!
உருவத்திலோ குணத்திலோ உன் விம்பத்தில் யாரையும் நான் இதுவரைை காணவில்லை...
ஓர் ஆசிரியையாய் எனக்கு அறிவு புகட்டியதில்லை,ஆனால் நீ புகட்டிய பண்பினால் இன்று என் அறிவு அழகாகிக்கொண்டு செல்கிறது...!
நான் இது வரை சந்தித்ததில்
ஆருயிர் தோழி நீ தான்...
உரிமையோடு உண்மைகள் பேச உன்னோடு மட்டும் தான் முடியும் எனக்கு...
ஆயிரம் வார்த்தைகள் கூறி உன்னோடு
சண்டையிட்டாலும் அடுத்த நொடியில் நீ
தரும் ஆகாரத்தில் தோற்றுப்போகிறது
என் பிடிவாதம்...!
சம்பளமில்லா உழைப்பாளியும்
அடுப்பங்கறை அழகோவியமும்
நீ தான் அம்மா...
தந்தை அன்பை நாங்கள் நுகர்ந்ததில்லை..
ஆனால் அதனை ஆயிரம் மடங்காய்
அதிகரித்து தந்தது உன் அரவணைப்பு தான்...!