மரணத்திலும் மறக்க முடியாது உன்னை

மரணத்திலும் மறக்க முடியாது உன்னை

மரண வாயிலில் நின்றாலும்,
உன்னை மறக்க மாட்டேன்;
தொலைக்க மாட்டேன்!
ஏனெனில்,
என்னுயிரிலும் மேலான
உணர்வு நீ!!!

நீ பேசாமலே,
உன்னைப் பற்றி மட்டுமே
என்னைப் பேச வைக்கிறாய்;
எவ்வளவு மாயம் செய்கிறாய்!!!

ஆனாலும்,
உன்னை எண்ணி எண்ணி
தொலைந்துப் போகும்
எனது நேரத்துளிகள் கூட,
ஓர் அழகு!!!
உன் உள்ளம் போல!

என் மனம் எங்கும் நீயே;
எனதுயிர் தமிழே!!!

எழுதியவர் : பானுமதி (2-Oct-17, 1:48 pm)
சேர்த்தது : மதி
பார்வை : 623

மேலே