நீயே உன்னை நம்பு

உன்னை நம்பு, அசாத்தியமான விஷயங்களை உன்னால் அடைய முடியுமென்று நீயே உன்னை நம்பு என் தோழா..

உனக்குள்ளே புதிதாக புதிய திறமைகளை நீ கண்டறியலாமென்று
நீயே உன்னை நம்பு..

புதிய உயரங்களை நீ அடையலாமென்று நீயே உன்னை நம்பு..
மேலும், ஒவ்வொரு தீர்வையும் மீறுகின்ற சிக்கலை உன்னால் விளங்கிக் கொள்ளலாமென்று நீயே உன்னை நம்பு.

எல்லாவித கடினமான சூழ்நிலைகளையும் உன்னால் சமாளிக்க முடியுமென்று நீயே உன்னை நம்பு.

எந்தவித சிக்கலான விஷயங்களையும்
உன்னால் செய்ய முடியுமென்று நீயே உன்னை நம்பு..

உன்னால் இயற்கையின் அழகை இரசித்து புத்துணர்வு பெற முடியுமென்று நீயே உன்னை நம்பு..

அனுபவத்திலிருந்து பெறும் திறன்களைக் கற்றுக் கொள்ளலாமென்று நீயே உன்னை நம்பு..

உன் வாழ்க்கையில் புதிய ஆழங்களைப் புரிந்துகொள்ள, உன்னால் முடியும்.

நீ உன் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் செல்ல, உன்னால் வழி செய்ய முடியுமென்று நீயே உன்னை நம்பு..
அதை நோக்கி வேலை செய் மகிழ்ச்சியுடன், உறுதிப்பாடுடன், அர்ப்பணிப்புடன்...

நீயே உன்னை நம்பு,
நீ ஆசீர்வதிக்கப்படுவாய்.
நீ இயற்கையோட அற்புத படைப்பே...

நீயே உன்னை நம்பாவிடில் வேறு யார் உன்னை நம்புவார்?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Oct-17, 6:33 pm)
Tanglish : neeye unnai nambu
பார்வை : 4478

மேலே