மண்ணின் மாண்பு --- வெள்ளொத் தாழிசை
தூசுதனை சுத்தமாக்கித் தூய்மைதனைப் போற்றிட்டால்
வீசுகின்ற தென்றல் விரைந்துமே வீசிடும்
மாசிலா வாழ்வாகும் மாண்பு .
எங்கெங்குப் பார்த்தாலு மெத்திக்கும் நெல்வயல்கள்
பங்கிடவும் வேண்டாமே பாரினிலே அங்கங்கே
மங்கா வளமாகும் மாண்பு .
எண்ணம் முழுவதிலு மேற்றமாய் நின்றிட்டால்
கண்ணிலே தோன்றும் கதிர்களைப் போற்றுவோம்
மண்ணில் வளமாகும் மாண்பு .