செருப்பு அரசியல்
செருப்பு அரசியல்
-+++++--+++++++++
'நல்லாட்சி' அமைய
நாடுதோறும் கூட்டங்கள்
மேடைகள் தோறும்
செருப்புகளின் எண்ணிக்கை மட்டும்
மிக மிக அதிகம்
வெறுப்பு அரசியல் பேசும்
செருப்புகளின் கூட்டங்கள்
மக்களின் வயிற்று நெருப்பை
அள்ளிக் கொள்ளும்
செருப்பான பேச்சுகள்
கார்களின் கண்ணாடிகள் திறந்த உடனே கை கூப்பிகள் கண் திறக்கிறார்கள்
அய்ம்பது மைக்குகள் புதுசேதி தேடுகின்றன நம்பிக்கை இழக்காமல்
கட்சிக்கொடியை காப்பாற்ற முடியாதவர்கள் கைகளில் நாடு.
இந்த நெடுஞ்சாண்கிடை செருப்புகள்
புது முதலாளி தேடுகிறார்கள்.
கூழை கும்பிடு ரெடி!
காவிகளின் பெயரில்
காட்டாட்சி நடக்கிறது
அனிதாக்கள் எதிர்காலம் சிதைக்கப்படுகின்றன
மக்கள் போராட்டங்கள்
தடுக்கப்படுகின்றன
கார்ப்பரேட்டுகள் புது இந்தியா பிரம்மாக்கள் ஆகிறார்கள்
சேதி...சேதி...சேதி...
எட்டுத்திக்கும் சலைக்காமல்
தண்ணீர் குடம் நிறைந்ததா?
... ... ...
அத்தியாவசியப் பொருட்கள்
நியாய விலைக் கடைகளில் கிடைக்குமா?
உறுதியில்லை.
இப்படி பலப்பல.
ஆனாலும் செருப்புகளின் பேச்சுகள்
செவிப்பறைகளை கிழிக்கின்றன.
கேனப்பயல் கூட்டமென
கேமராக்கள் நம்மை படம்பிடிக்கின்றன.
போதும்
நிறுத்திக் கொள்வோம்
'செருப்பில்லாதோர்' ஒன்றிணைப்போம்
சேர்ந்தியக்கமாவோம்
நம் உரிமைகளை நாமே வென்றெடுப்போம்
'செருப்புகளுக்கு' செருப்படி தயார்!!!
- ஜான் பிரான்சிஸ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
