அன்புப் பண்பாடு

அன்பை நாடி...நாடி...
அன்புக்காய் ஏங்கி... ஏங்கி...
அன்பிலே கசிந்து... கசிந்து...
அன்பில் தோற்று...தோற்று...
அன்பு நிறைந்து... நிறைந்து...
அன்பினை வழங்கி...வழங்கி...
அன்புதனை இழந்து...இழந்து...
அன்பினால் புண்பட்டு...புண்பட்டு...
அன்பாய் பண்பட்டு...பண்பட்டு...
துளிர்க்கும்
அன்புப் பண்பாடுதான் வாழ்க்கையோ!
அன்புடைமை=வாழ்வு
அன்பில்லாமை=____________________ .
(கோடிட்ட இடத்தை விருப்பம் போல் நிரப்பிக் கொள்க.)
- ஜான் பிரான்சிஸ்

எழுதியவர் : ஜான் பிரான்சிஸ் (3-Oct-17, 6:35 pm)
Tanglish : anbup panpadu
பார்வை : 276

மேலே